தில்லியின் ஜமா மஸ்ஜித் என்று பொதுவாக அறியப்படும் மஸ்ஜித்-இ-ஜெஹான்-நுமா ('உலகைப் பிரதிபலிக்கும் மசூதி'), இந்தியாவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாகும். இது 1650 மற்றும் 1656 க்கு இடையில் முகலாய பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது. மேலும் அதன் முதல் இமாம் சையத் அப்துல் கஃபூர் ஷா புகாரியால் திறந்து வைக்கப்பட்டது. முகலாய தலைநகர் ஷாஜஹானாபாத்தில் அமைந்துள்ளது.
நீல நிற மணல் கற்களால் கட்டப்பட்ட இஸ்லாமிய கட்டிடக் கலைகளின் சிறப்பான குவிமாடங்கள், மினாரட்டுகளை கொண்ட ப்ளூ மாஸ்க் எனப்படும் நீல மசூதி, துருக்கியின் இஸ்தான்புல் பகுதியில் அமைந்துள்ளது. சுல்தான் அகமது மசூதி என்றும் அழைக்கப்படும் இந்த மசூதி 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. வித்தியாசமான நிறத் தோற்றம் கொண்ட மசூதிகளில் இதுவும் ஒன்று.
சீனாவின் சியான் மாகாணத்தில் உள்ள கிரேட் மாஸ்க் ஆப் சியான்(great mosque xian), எந்த விதத்திலும் சாதாரண மசூதியை போல எந்த விதத்திலும் தெரியாது. முழுக்க முழுக்க சீன கட்டிடகலை அமைப்பையே கொண்டிருக்கும். மசூதியின் ஆரம்பகால கட்டுமானம் கி.பி 742 ஆம் ஆண்டிற்கு முந்தைய டாங் வம்சத்தை சேர்ந்தது. இன்று நாம் காணும் மசூதி, மிங் வம்சத்தின் போது பல கூடுதல் வேலைகளின் விளைவாகும்.
மொராக்கோ நாட்டில் உள்ள மராகேஷ் கௌடோபியா (koutoubia) மசூதியின் கட்டிடக்கலை என்பது முற்றிலும் மாறுபட்டது. இந்த மசூதியை நிர்மாணிப்பதில் ஈடுபடுத்தப்பட்ட நிபுணர் கைவினைத்திறன் மற்றும் திறமை இந்த மசூதியின் ஈர்க்கக்கூடிய வடிவமைப்பு மற்றும் அமைப்பில் தெளிவாகத் தெரிகிறது. டவர் போன்ற அமைப்பில் தான் இந்த மசூதி காணப்படும்.