முகப்பு » புகைப்பட செய்தி » விலங்குகள் நிறைந்த தீவுகளை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா..? இப்போது தெரிந்துகொள்வோம்..!

விலங்குகள் நிறைந்த தீவுகளை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா..? இப்போது தெரிந்துகொள்வோம்..!

ஒரு சில தீவுகளில் மக்கள் இருக்கும் எண்ணிக்கையை விட விலங்குகள் தான் அதிகமாக இருக்கும். அதில் சிலவற்றை பார்ப்போம்.

  • 16

    விலங்குகள் நிறைந்த தீவுகளை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா..? இப்போது தெரிந்துகொள்வோம்..!

    தீவுகள் என்றதும் யாரும் இல்லாத நீர்நிலைக்கு நடுவில் உள்ள இடம் என்று தான் கற்பனையில் ஒரு படம் விரியும் ஆனால் உண்மை அதுவல்ல. சின்ன தீவகள் இருந்தாலும் சரி பெரிய தீவு நாடக இருந்தாலும் சரி அதன் சில தனித்துவமான விலங்குகளின் கூட்டம் இருக்கத்தான் செய்யும். அதிலும் ஒரு சில தீவுகளில் மக்கள் இருக்கும் எண்ணிக்கையை விட விலங்குகள் தான் அதிகமாக இருக்கும். அதில் சிலவற்றை பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 26

    விலங்குகள் நிறைந்த தீவுகளை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா..? இப்போது தெரிந்துகொள்வோம்..!

    கேமன் தீவுகளில் பெரிய தீவை பச்சை உடும்புகள்  ஆக்கிரமிக்துள்ளது என்றே சொல்லலாம். மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த ஊர்வன 1980 களில் கிராண்ட் கேமனுக்கு செல்லப்பிராணிகளாக கொண்டு வரப்பட்டது, ஆனால் இப்போது, எண்ணிக்கை பெருகி தீவின் பூர்விக விலங்குகளை அச்சுறுத்தி வருகிறது. அதோடு அவை காடுகளில் உள்ள மரங்களிலிருந்து பட்டைகளை அகற்றி, தோட்டங்கள் மற்றும் பண்ணைகளை சேதப்படுத்துகின்றன.

    MORE
    GALLERIES

  • 36

    விலங்குகள் நிறைந்த தீவுகளை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா..? இப்போது தெரிந்துகொள்வோம்..!

    இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு பழங்கால எரிமலையின் உச்சியில் ,கிறிஸ்மஸ் தீவு என்ற ஆஸ்திரேலிய பகுதி அமைந்துள்ளது. அதன் பிரகாசமான சிவப்பு ஓட்டு மீன்களுக்கு, சிவப்பு நண்டுகளுக்குப்  பிரபலமானது. தீவை பூர்வீகமாகக் கொண்ட இந்த நண்டுகளை உலகில் வேறு எங்கும் காண முடியாது. சுமார் 40-50 மில்லியன் சிவப்பு நண்டுகள் இங்கு வாழ்கின்றன.

    MORE
    GALLERIES

  • 46

    விலங்குகள் நிறைந்த தீவுகளை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா..? இப்போது தெரிந்துகொள்வோம்..!

    சீல் தீவு என்பது தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் கடற்கரையில் உள்ள ஃபால்ஸ் விரிகுடாவில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இந்த கடற்கரை தீவில் 75,000 க்கும் மேற்பட்ட கடல்பசுக்கள் வாழ்கின்றன.அண்டை நாடான நமீபியா போன்ற பிற நாடுகளில் கடல் பசுக்கள்  வேட்டையாடப்பட்டாலும், கேப் டவுனில் கடல்பசுக்கள் 1973 முதல் பாதுகாக்கப்பட்ட இனமாக உள்ளன.

    MORE
    GALLERIES

  • 56

    விலங்குகள் நிறைந்த தீவுகளை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா..? இப்போது தெரிந்துகொள்வோம்..!

    ஹென்டர்சன் தீவு தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள ஒரு பவள தீவு ஆகும் . மனிதர்கள் யாரும் இல்லாத ஹென்டர்சன் தீவில் உலகில் வேறு எங்கும் இல்லாத சில பறவைகள், முதுகெலும்புகள் மற்றும் தாவரங்கள் உள்ளன.  800 ஆண்டுகளுக்கு முன்பு மாலுமிகளால் தீவில் அறிமுகப்படுத்தப்பட்ட எலிகள் இப்போது ஒரு தொல்லையாக மாறிவிட்டது.

    MORE
    GALLERIES

  • 66

    விலங்குகள் நிறைந்த தீவுகளை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா..? இப்போது தெரிந்துகொள்வோம்..!

    நயாகரா ஆற்றில் உள்ள ஒரு சிறிய நியூயார்க் தீவில் மிகக் குறைவான மக்கள் மட்டுமே வசிக்கின்றனர், ஆனால் பெரிய அளவிலான பூனைகள் இருக்கின்றன. டோனவாண்டா தீவில்  நூற்றுக்கணக்கான பூனைகள் இருப்பது மட்டும் இல்லாமல், வீட்டில் தொல்லை பண்ணும் பூனைக்களை இந்த தீவில் கொண்டு வந்து விடும் பழக்கமும் உண்டு.

    MORE
    GALLERIES