முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோடை விடுமுறையை கொண்டாட தமிழ்நாட்டில் உள்ள அம்யூஸ்மென்ட் பார்க் லிஸ்ட்.. குழந்தைகளை கூட்டிச் செல்லுங்க..

கோடை விடுமுறையை கொண்டாட தமிழ்நாட்டில் உள்ள அம்யூஸ்மென்ட் பார்க் லிஸ்ட்.. குழந்தைகளை கூட்டிச் செல்லுங்க..

55 அடி உயரத்தில் இருந்து விழும் தண்ணீருடன் குற்றாலத்தை பிரதிபலிக்கும் ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி உள்ளது.

  • 17

    கோடை விடுமுறையை கொண்டாட தமிழ்நாட்டில் உள்ள அம்யூஸ்மென்ட் பார்க் லிஸ்ட்.. குழந்தைகளை கூட்டிச் செல்லுங்க..

    கோடை காலம் தொடங்கிவிட்டது. அதுவும் இந்த வருட வெயில் எல்லாம் சொல்வதற்கு இல்லை என்பது போல கொளுத்தி எடுக்கிறது. அடிக்கும் வெயிலுக்கு தண்ணீருக்குள் தவளை போல கிடந்தால் பரவாயில்லை என்று தோன்றும். அப்படி இருக்கும்போது தமிழகத்தில் இருக்கும் தண்ணீர் மற்றும் பனியால் நிரம்பிய அம்யூஸ்மெண்ட் பார்க்குகள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 27

    கோடை விடுமுறையை கொண்டாட தமிழ்நாட்டில் உள்ள அம்யூஸ்மென்ட் பார்க் லிஸ்ட்.. குழந்தைகளை கூட்டிச் செல்லுங்க..

    அந்த வரிசையில் முதலில் சொல்ல இருப்பது 44 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் VGP யுனிவர்சல் ராஜ்ஜியத்தின் அங்கமான VGP ஸ்னோ கிங்டம். தமிழ்நாட்டின் முதல் மற்றும் ஒரே உள்- அரங்க பனி தீம் பார்க் இதுதான். இங்கே ஐஸ் ஸ்கேட்டிங், ஸ்னோபோர்டிங், பனியில் சறுக்கி ஓடும் சவாரி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஏராளமான செயல்பாடுகள் உள்ளன. வாரம் முழுவதும் திறந்திருக்கும் இந்த அம்யூஸ்மெண்ட் பார்க் காலை 10 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும். நுழைவு கட்டணம்: பெரியவர்களுக்கு 650 ரூபாய். குழந்தைகளுக்கு 550 ரூபாய் ஆகும்.

    MORE
    GALLERIES

  • 37

    கோடை விடுமுறையை கொண்டாட தமிழ்நாட்டில் உள்ள அம்யூஸ்மென்ட் பார்க் லிஸ்ட்.. குழந்தைகளை கூட்டிச் செல்லுங்க..

    கோவையில் இருக்கும் மக்களுக்கான குதூகலமான இடமாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பிளாக் தண்டர் இருக்கும். ஏறக்குறைய 50 நீர் விளையாட்டுகள், ஹாட் ஏர் பலூன், சர்ஃபிங், பறவை பூங்கா, அக்வாரியம், 5டி தியேட்டர், வீடியோ கேம்ஸ், ஹாரர் ஹவுஸ் மற்றும் அனிமல் வாட்ச் டவர் ஆகியவை உங்களை இந்த கோடை விடுமுறையில் குதூகலப்படுத்தும். காலை 9 மணி முதல் மாலை 6 வரை திறந்திருக்கும் இந்த அம்யூஸ்மென்ட் பார்க் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 840 குழந்தைகளுக்கு 750 ரூபாய் வசூலிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 47

    கோடை விடுமுறையை கொண்டாட தமிழ்நாட்டில் உள்ள அம்யூஸ்மென்ட் பார்க் லிஸ்ட்.. குழந்தைகளை கூட்டிச் செல்லுங்க..

    சென்னையில் கொளுத்தும் வெயிலுக்கான மற்றொரு ஸ்பாட், பூந்தமல்லியில் உள்ள குயின்ஸ்லாந்து பூங்கா. 33 பெரியவர்களுக்கும், 18 குழந்தைகளுக்குமான 51 நீர் விளையாட்டுகளைக் கொண்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் தென்கிழக்கு ஆசியாவின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்றான பிரீபால் கோபுரத்தையும் கொண்டுள்ளது. திங்கள் தவிர மற்ற நாட்களில் காலை 9 .30 முதல் 7. 30 வரை திறந்திருக்கும். அம்யூஸ்மென்ட் பார்க் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 550 குழந்தைகளுக்கு 450 ரூபாய் வசூலிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 57

    கோடை விடுமுறையை கொண்டாட தமிழ்நாட்டில் உள்ள அம்யூஸ்மென்ட் பார்க் லிஸ்ட்.. குழந்தைகளை கூட்டிச் செல்லுங்க..

    கோவையில் உள்ள மற்றொரு இடம் பேரூர் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், நகரிலிருந்து 8.5 கிமீ தொலைவில் சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ளது. பிளாக் தண்டர் அளவு பெரிய இடமாக இல்லாவிட்டாலும் அதே குளிர்ச்சி அதே த்ரில்லிங் அனுபவம் இங்கே இருக்கும். இங்கு பெரியவர்களுக்கு : 600, குழந்தைகளுக்கு : ரூ.550 கட்டணமாகும்.

    MORE
    GALLERIES

  • 67

    கோடை விடுமுறையை கொண்டாட தமிழ்நாட்டில் உள்ள அம்யூஸ்மென்ட் பார்க் லிஸ்ட்.. குழந்தைகளை கூட்டிச் செல்லுங்க..

    சுற்றுலா தலமான ஊட்டியில் அட்டகாசமான ஒரு தீம் பார்க் உள்ளது. தண்டர் வேர்ல்ட் அல்லது டைனோசர் பூங்கா என்றும் அழைக்கப்படும் இடத்தில் ஜுராசிக் ஜங்கிள், சுழல்(vortex) மற்றும் பேய் மாளிகை(Haunted House) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் 5டி தியேட்டர் மற்றும் கேமரா மியூசியம் , எல்லா வயதினருக்கும் நீர் விளையாட்டுகள் உள்ளன.இங்கு செல்ல திட்டமிட்டால் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையானா காலத்தில் காலை 10:00 முதல் மாலை 7:00 வரையும், நவம்பர் முதல் மார்ச் வரை: காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரையும் செல்லுங்கள். டிக்கெட் விலை: INR 300 முதல் INR 1000 வரை ஆகும்.

    MORE
    GALLERIES

  • 77

    கோடை விடுமுறையை கொண்டாட தமிழ்நாட்டில் உள்ள அம்யூஸ்மென்ட் பார்க் லிஸ்ட்.. குழந்தைகளை கூட்டிச் செல்லுங்க..

    அதே போல மதுரை நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பவர்களுக்கு மதுரை திண்டுக்கல் சாலையில் இருக்கும் அதிசயம் அம்யூஸ்மென்ட் பார்க் ஏற்றதாக இருக்கும்.55 அடி உயரத்தில் இருந்து விழும் தண்ணீருடன் குற்றாலத்தை பிரதிபலிக்கும் ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி, நீர் விளையாட்டுகள், ட்ரை கேம்ஸ் என்று எல்லாம் இங்கே இருக்கும். காலை 10. 30 முதல் மாலை 5 .30 வரை திறந்திருக்கும் இங்கே நுழைவு கட்டணம், பெரியவர்களுக்கு 800 குழந்தைகளுக்கு 500

    MORE
    GALLERIES