இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரம்மனுக்காக 5 கோவில்கள் தான் உள்ளது. அதில் பிரசித்தி பெற்ற கோவில் என்றால் ராஜஸ்தான் புஷ்காரில் உள்ள பிரம்மா கோவிலை சொல்லலாம். அவுரங்கசீப் காலத்தில் மற்ற இந்து கோயில்கள் எல்லாம் அடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இந்த கோவில் மட்டுமே தப்பியதாக சொல்கின்றனர்
குஜராத்தில் உள்ள ஸ்தம்பேஸ்வர் மகாதேவ் கோவிலின் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இது கடல்பகுதிக்கு உள்ளே கட்டப்பட்டுள்ளது. கடலில் குறைந்த அலைகள் உள்ள நேரங்களில் மட்டுமே இதை தரிசிக்க முடியும். அதிக அலைகளின் போது, கோவில் கிட்டத்தட்ட கடலுக்குள் மறைந்துவிடும். தண்ணீர் இறங்கும் போது மட்டுமே மீண்டும் தோன்றும்.