முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஆசியாவில் மக்கள் அதிகம் பார்த்திராத அழகான இடங்களின் பட்டியல் இதோ!

ஆசியாவில் மக்கள் அதிகம் பார்த்திராத அழகான இடங்களின் பட்டியல் இதோ!

மத்திய ஆசியாவின் முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரமாக இருப்பது கிவா

  • 110

    ஆசியாவில் மக்கள் அதிகம் பார்த்திராத அழகான இடங்களின் பட்டியல் இதோ!

    ஆசிய நாடுகள் என்பது பழமையான கலாசார ஆதாரங்களுக்கும் எழில் கொஞ்சும் அழகிற்கும் மலை மற்றும் கடல் சார்ந்த தலங்களுக்கும் பிரபலமானது. அங்கு பல பிரபலமான தலங்கள் இருந்தாலும் சில தெரியாத, ஆனால் அழகான இடங்கள் உள்ளன. அவற்றை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 210

    ஆசியாவில் மக்கள் அதிகம் பார்த்திராத அழகான இடங்களின் பட்டியல் இதோ!

    டோச்சு லா(Dochula Pass) என்பது திம்புவில் இருந்து புனாக்கா செல்லும் சாலையில் பூட்டானுக்குள் இருக்கும் பனி படர்ந்த இமயமலைப்பாதையாகும், இங்கு மூத்த ராணி தாயான ஆஷி டோர்ஜி வாங்மோ வாங்சுக் என்பவரால் "ட்ருக் வாங்யால் சோர்டென்ஸ்" (Druk Wangyal Chortens) என்று அழைக்கப்படும் 108 நினைவுச் சின்னங்கள் அல்லது ஸ்தூபிகள் கட்டப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 310

    ஆசியாவில் மக்கள் அதிகம் பார்த்திராத அழகான இடங்களின் பட்டியல் இதோ!

    கெப்(Kep), கம்போடியா: தெற்கு கம்போடியாவில் உள்ள அமைதியான கடலோர நகரமான இது கடல் உணவு மற்றும் அமைதியான சூழ்நிலைக்கு பெயர் பெற்றது. இந்த நகரம் ஒரு காலத்தில் பிரெஞ்சு காலனித்துவவாதிகளுக்கு பிரபலமான ரிசார்ட் இடமாக இருந்தது. மேலும் பல பழைய கட்டிடங்கள் இங்குள்ளன.

    MORE
    GALLERIES

  • 410

    ஆசியாவில் மக்கள் அதிகம் பார்த்திராத அழகான இடங்களின் பட்டியல் இதோ!

    ஜார்ஜியா நாட்டின் தலைநகரான திபிலிசி(tbilisi) நகரம் பழைய பாரசீக மற்றும் ரஷ்ய ஆட்சியின் கீழ் ஒரு நீண்ட, சிக்கலான வரலாற்றை பிரதிபலிக்கும். அதன் மாறுபட்ட கட்டிடக்கலை, கிழக்கு ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள், நவ்வா கட்டிடங்கள் , 4 ஆம் நூற்றாண்டின் புனரமைக்கப்பட்ட கோட்டையான நரிகலா மற்றும் "ஜார்ஜியாவின் அன்னையின்" சிலையான கார்ட்லிஸ் டெடா இவை அனைதும் நம்மை பிரமிக்க வைக்கும்.

    MORE
    GALLERIES

  • 510

    ஆசியாவில் மக்கள் அதிகம் பார்த்திராத அழகான இடங்களின் பட்டியல் இதோ!

    ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ(Hokkaido) அதன் செழிப்பான விவசாயம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு பிரபலமானது. ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள குளிர்ந்த நீர் மீன் மற்றும் கடல் தாவரங்களுக்கு ஏற்றது. குறிப்பாக ரிஷிரி மற்றும் ரீபனின் யூனி (கடல் அர்ச்சின்) போன்ற குறிப்பிட்ட மீன்வகைகள் இங்கு பிரபலமானது. அதேபோல இங்குள்ள தாவரங்கள் வண்ணமயமான திரைப்பட பாணியிலான கட்சி அமைப்பை கொடுக்கவல்லது.

    MORE
    GALLERIES

  • 610

    ஆசியாவில் மக்கள் அதிகம் பார்த்திராத அழகான இடங்களின் பட்டியல் இதோ!

    உஸ்பெகிஸ்தானின் Khorezm பகுதி கிவா(khiva) ஒரு பாலைவன நகரமாகும், இது உலகின் மிகவும் பழைய பட்டுப்பாதை நகரங்களில் ஒன்றாகும். கிவா அடிப்படையில் ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம். உண்மையில், அதன் சிறிய பழைய நகரத்தில் 50 க்கும் மேற்பட்ட வரலாற்று தளங்கள் உள்ளன. இது மத்திய ஆசியாவின் முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இந்நகரின் பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்களுக்குள் களிமண் நிற வீடுகள் மற்றும் பளபளக்கும் மினாராக்கள் ஒளி வீசும்.

    MORE
    GALLERIES

  • 710

    ஆசியாவில் மக்கள் அதிகம் பார்த்திராத அழகான இடங்களின் பட்டியல் இதோ!

    போஹோல்(bohol)மாகாணம் பிலிப்பைன்ஸின் மத்திய விசாயாஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். வசீகரிக்கும் வெள்ளை மணல் கடற்கரைகள், தெளிவான நீர்நிலைகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த டைவிங் தளங்களுக்கு பெயர் பெற்றது. அதைவிட முக்கியமாக அதன் சாக்லேட் மலைகளுக்காக புகழ் பெற்றது.

    MORE
    GALLERIES

  • 810

    ஆசியாவில் மக்கள் அதிகம் பார்த்திராத அழகான இடங்களின் பட்டியல் இதோ!

    ரசியாவின் தென்கிழக்கு சைபீரியாவில் அமைந்துள்ள, 3.15 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பைக்கால்(baikal) ஏரி, உலகின் பழமையான (25 மில்லியன் ஆண்டுகள்) மற்றும் ஆழமான (1,700 மீ) ஏரியாகும். இது உலகின் மொத்த உறையாத நன்னீர் இருப்பில் 20% கொண்டுள்ளது. ஆர்டிக் பகுதியில் உள்ள இந்த ஏரி அதிகம் மக்கள் பார்வையிடாத இடமாகும்.

    MORE
    GALLERIES

  • 910

    ஆசியாவில் மக்கள் அதிகம் பார்த்திராத அழகான இடங்களின் பட்டியல் இதோ!

    இசிக்-குல் (Issyk-Kul) என்பது கிழக்கு கிர்கிஸ்தானில் உள்ள வடக்கு தியான் ஷான்(Tian Shan) மலைகளில் உள்ள ஒரு எண்டோர்ஹீக்(endorheic lake) ஏரியாகும். அதாவது இந்த ஏரியில் இருந்து நீர் வெளியேறுவதற்கான பாதை எதுவும் கிடையாது. ஆவியாகி வறண்டால் தான் உண்டு. இது உலகின் ஏழாவது ஆழமான ஏரியாகும், இது உலகின் பத்தாவது பெரிய ஏரியாகும்.

    MORE
    GALLERIES

  • 1010

    ஆசியாவில் மக்கள் அதிகம் பார்த்திராத அழகான இடங்களின் பட்டியல் இதோ!

    உள்நாட்டில் "அருகம் குடா" என்று அழைக்கப்படும் அருகம் விரிகுடா(arugam bay), இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையின் உலர் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இது பண்டைய மட்டக்களப்பு பிரதேசத்தின் வரலாற்று குடியேற்றமாகும். அறுகம் பே இலங்கையின் சிறந்த சர்ஃபிங் இடமாக மிகவும் பிரபலமானது

    MORE
    GALLERIES