நகரங்கள் ஒவ்வொன்றையும் அதன் தனித்துவத்தை வைத்து தான் அடையாளம் காணுவோம். தாஜ் மஹால் என்றதும் ஆக்ரா ஞாபத்திற்கு வருவது போல, சில இடத்திற்கு அங்குள்ள கட்டிடம் அடையாளமாக மாறும். சில நகரங்கள் அங்கு நடக்கும் திருவிழாக்களால் பிரபலமாகும். சில நகரங்கள் மட்டும் குறிப்பிட்ட நிறத்தால் அறியப்படும். அப்படியே இந்திய நகரங்களின் பட்டியல் இது.
ப்ளூ சிட்டி, ஜோத்பூர்
இந்தியாவின் நீல நகரம் எனப்படும் ஜோத்பூரின் கம்பீரமான மெஹ்ரான்கர் கோட்டையில் இருந்து பார்க்கும்போது நகரத்தின் பெரும்பகுதி நீல நிறத்தில் வரையப்பட்டுள்ளது தெரியும் . அதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. வெப்பமான கோடையில் வீட்டின் உட்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க நீல நிறம் உதவுகிறது என்றும் கடந்த காலங்களில் ஜோத்பூரின் பல வரலாற்று கட்டிடங்கள் கரையான்களால் சேதமடைந்த நகரத்தை சுண்ணாம்புடன் காப்பர் சல்பேட் கலந்து அடித்து சரி செய்ததால் அந்த நிறம் நிலைத்து விட்டதாக நம்புகின்றனர்.
வெள்ளை நகரம், உதய்பூர்
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் வெள்ளை நகரம் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம், இது பல அழகான மற்றும் பழமையான பளிங்கு கட்டிடடங்கள் பிரசித்தி பெற்று விளங்குகிறது.தவிர, இது ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. முக்கியமாக ராஜபுத்திரர்கள் கட்டிய வெள்ளை பளிங்கு மாளிகைகள் தான் இந்த நகரத்திற்கு அழகு சேர்த்து வருகிறது.
பிரவுன் சிட்டி, ஜெய்சல்மர்
ராஜஸ்தானில் தான் இந்த அழகிய நகரமும் அமைந்துள்ளது. சூரியக் கதிர்கள் தார் பாலைவனத்தின் மீது விழும் போது அதன் நிறத்தை கற்பனை செய்து பாருங்கள்! பிரவுன், கோல்டன் அல்லது சிறிது மஞ்சள் நிறமாக கலந்து இருக்கும். ஜெய்சல்மர் நிலத்தின் நிறம் அதன் கட்டிடக்கலைகளிலும் பிரதிப்பதால் தான் இது பிரவுன் சிட்டி என்று அழைக்கப்படுகிறது
பிங்க் சிட்டி, ஜெய்ப்பூர்
1876 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரை வரவேற்க மகாராஜா சவாய் ராம் சிங் ஜெய்ப்பூர் சுவர்களை 'டெரகோட்டா பிங்க்' வண்ணத்தில் பூசினார் என்று நம்பப்படுகிறது. பின்னர், நகரத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம், அப்பகுதியில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் ஒரே நிறத்தில் வர்ணம் பூசப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது, அது இன்று வரை நீடிக்கிறது.
ஆரஞ்சு நகரம், நாக்பூர்
மகாராஷ்டிரா மாநிலமத்தில் உள்ள நாக்பூர் ஆரஞ்சுகளுக்கு பிரபலமானது மற்றும் இப்பகுதி ஆரஞ்சுகளின் முக்கிய வர்த்தக மையமாகவும் உள்ளது. விதர்பா பகுதியில் 80000 ஹெக்டேர் நிலத்தில் சுமார் 5 லட்சம் டன்கள்ஆரஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. நாக்பூர் இந்தியாவின் சரியான புவியியல் மையத்தில் அமைந்துள்ளது.