உங்கள் காதலியிடம் அன்பை வெளிப்படுத்துவதற்கான சரியான அமைப்பை தேடினால் மலைப்பாங்கான அதே சமயம் எழில் கொஞ்சும் சிக்கிமின் பெல்லிங் உங்களுக்கு சரியாக இருக்கும். 2150 மீ உயரத்தில் அமர்ந்திருக்கும் பெல்லிங், காங்டாக்கின் மறைக்கப்பட்ட ரத்தினங்களில் ஒன்றாகும். அதே போல இங்கே இருக்கும் கண்ணாடி பாலத்தில் நின்று மலையை ரசிப்பது ரொமான்டிக் உணர்வை தரும்
நீர்நிலைக்கு அருகில் அமைதி நிரம்பிய ஒரு பகுதியில் தனது அன்பிற்கு உரியவரோடு இருக்க விரும்பினால் கேரளாவின் பூவார் அதற்கு ஏற்றது.இந்த சிறிய கடற்கரை நகரம் ஒருபுறம் உப்பங்கழியும், மறுபுறம் அழகான கடற்கரையும் கொண்டுள்ளது. இந்த இயற்கை அதிசயத்தைப் பார்வையிட்டு உங்கள் காதலர் தினத்தை இந்த நேரத்தில் மறக்கமுடியாததாக ஆக்குங்கள்.