அதிலும் குறிப்பாக பயணம் என்றால் விமானம் பிடித்தோ, கார் ஏற்பாடு செய்து கொண்டோ செல்வதில்லை. நம் கை வசம் இருக்கின்ற பைக் போதுமானது என்பதே தற்போதைய எதார்த்தம். தெற்கே குமரியை ஒட்டிய எல்லைப் பகுதியில் இருக்கின்ற நம்ம ஊர் இளைஞர்களும் கூட இப்போதெல்லாம் நாட்டின் மற்றொரு துருவத்தில் உள்ள லடாக் மலைப் பிரதேசத்தை நோக்கி பயணம் செய்கின்றனர்.
தேவையான பணம் : மலைப்பகுதிகளில் பயணம் செய்யும்போது அருகாமையில் ஏடிஎம் மையங்கள் இல்லாமல் போகலாம். ஆகவே, போதுமான அளவுக்கு ரொக்கப் பணம் கையிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் டிஜிட்டல் பேமெண்ட் வைத்திருந்தாலும் கூட சில சமயம் நெட்வொர்க் பிரச்சினையால் அவற்றை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தேவையான ஆவணங்கள் : மிக முக்கியமாக உங்கள் வாகனத்திற்கான பதிவு எண் புத்தகம், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை கொண்டு செல்ல வேண்டும். சில இடங்களுக்குச் செல்லும்போது உள் அனுமதி (பெர்மிட்) பெற வேண்டியிருக்கும். அதற்கு தேவையான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும். ஆதார் போன்ற மிக முக்கியமான அடையாள அட்டை மற்றும் சில புகைப்படங்கள் கை வசம் இருக்க வேண்டும்.
முதல் உதவி பெட்டி : மலைப் பகுதிகளில் பயணம் செய்யும்போது நம் கைகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய பெட்டி இது. காய்ச்சல், தலைவலி, இருமல், ஜலதோஷம் போன்ற பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் தரக் கூடிய மருந்துப் பொருட்கள் கை வசம் இருக்க வேண்டும். சின்ன, சின்ன காயங்கள், உராய்வுகளுக்கான பாண்ட் எய்டு மற்றும் முதுகு, மூட்டு வலி நிவாரண மருந்துகள் கொண்டு செல்ல வேண்டும்.
கூடுதல் பெட்ரோல் : நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது நம் வாகனத்தின் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு சென்றாலும் கூட எந்த சமயத்தில் பெட்ரோல் தீரும் என்பதும், அருகாமையில் பெட்ரோல் நிலையம் இல்லாமல் தவிக்க நேரிடும் என்பதையும் கணிக்க முடியாது. ஆகவே, 5 முதல் 10 லிட்டர் பெட்ரோல் இருப்பு வைத்துக் கொள்வது நல்லது.
நொறுவை தீனிகள் : நாம் செல்லும் வழியில் அவசரத்திற்கு சாப்பிட எதுவும் கிடைக்காமல் போகலாம். உணவகத்தை தேடி அலைவதற்குள் நம் பசியை தீர்த்துக் கொள்ள கை வசம் பிஸ்கட், குளுகோஸ், உலர் பழங்கள், நட்ஸ் போன்றவற்றை வைத்துக் கொள்ள வேண்டும். எளிதில் வெந்நீரை கொண்டு தயார் செய்யக் கூடிய நூடுல்ஸ், ஓட்ஸ் போன்றவையும் பலனளிக்கும்.
தேவையான பணம் : மலைப்பகுதிகளில் பயணம் செய்யும்போது அருகாமையில் ஏடிஎம் மையங்கள் இல்லாமல் போகலாம். ஆகவே, போதுமான அளவுக்கு ரொக்கப் பணம் கையிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் டிஜிட்டல் பேமெண்ட் வைத்திருந்தாலும் கூட சில சமயம் நெட்வொர்க் பிரச்சினையால் அவற்றை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.