நீண்ட தூர பயணங்களுக்கு நம்மில் பெரும்பாலான மக்களின் முதல் தேர்வு ரயில் பயணமாகத்தான் இருக்கும். குறைந்த கட்டணத்தில் படுத்துக்கொண்டே பயணம் செய்ய சோர்வு இல்லாமல் இருக்க ஏற்ற பயண வழியாக இது பார்க்கப்படுகிறது. வசதியான இருக்கை, பயணத்தின் போது நடந்து கொண்டிருக்கும் வாய்ப்பு, என்று நிறைய அம்சங்கள் உள்ளன.
80% டிக்கெட்டுகள் இப்போது ஆன்லைன் தளத்தில் தான் பதிவு செய்யப்படுகிறது. இந்த டிஜிட்டல் டிக்கெட் பதிவின் போது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் தவிர்த்து காத்திருப்பு பட்டியலில் நமது டிக்கெட் பதிவு இருப்பதாக கவனித்திருப்போம். நமக்கு முன் டிக்கெட் புக் செய்தவர்கள் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்தால்... காத்திருப்பு பட்டியல் டிக்கெட் உறுதி செய்யப்படும்.
ரிமோட் லொகேஷன் வெயிட்டிங் லிஸ்ட் (RLWL): பொதுவாக ரிமோட் லொகேஷன் காத்திருப்புப் பட்டியலின் கீழ் இடைநிலை நிலையங்களில் (அதாவது ஆரம்ப மற்றும் முடிவு இலக்கு அல்லாத மற்ற இடைப்பட்ட ஸ்டேஷன்களில்) காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில், இந்த காத்திருப்புப் பட்டியல் உங்களுக்கு ஒதுக்கப்படும். இதில் டிக்கெட் உறுதி செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அதாவது, நீங்கள் ஏறும் முந்தைய ஸ்டேஷன்களில் ஏதேனும் காலியிடம் இருந்தால், அதை உங்கள் டிக்கெட் வைத்து உறுதி செய்வார்கள். இது ரயில் அட்டவணை நேரத்திற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு முன்பே தயாரிக்கப்படுகின்றன.
ரிமோட் லொகேஷன் ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட் (RLGN): ஒரு பயணி டிக்கெட்டை புக் செய்யும் போது, RLWL கோட்டா எனில்.. ரிமோட் லொகேஷன் ஜெனரல் காத்திருப்புப் பட்டியலில் (RLGN) வைக்கப்படும். டிக்கெட்டை வாங்கிய பிறகு RLWL RLGN ஆக மாறும் என்பதை இது குறிக்கிறது. பயணங்களுக்கு புறப்படும் நிலையத்தால் பெர்த்கள் அல்லது இருக்கைகள் ஒதுக்கப்படும் போது, சாலையோர நிலைய காத்திருப்பு பட்டியல் (RSWL) ஒதுக்கப்படும்.
பூல் செய்யப்பட்ட கோட்டா காத்திருப்பு பட்டியல் (PQWL): பல சிறிய ரயில் நிலையங்கள் சேர்ந்து பூல் செய்யப்பட்ட ஒதுக்கீட்டு காத்திருப்பு பட்டியலை (PQWL) பகிர்ந்து கொள்கின்றன. இவை பொதுவாக இடைநிலை நிலையங்களுக்கு இடையில் பயணிப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அதாவது ரயிலின் தொடக்கப் புள்ளி மற்றும் முடிவுப் புள்ளிக்குப் பதிலாக நடுவில் ஏறி இறங்குபவர்களுக்கு இந்தக் காத்திருப்புப் பட்டியலில் டிக்கெட் வழங்கப்படுவது வழக்கம். இவை உறுதிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு.
கோரிக்கை காத்திருப்பு பட்டியல் (RQWL): ஒரு இடைநிலை நிலையத்திலிருந்து மற்றொரு இடைநிலை நிலையத்திற்கு முன்பதிவு செய்ய, இந்த ஒதுக்கீட்டின் கீழ் ஒரு கோரிக்கையை வைக்கலாம். ஒரு வரம்புக்குப் பிறகு காத்திருப்புப் பட்டியல் பொது ஒதுக்கீடு, தொலைதூர இட ஒதுக்கீடு, பூல் செய்யப்பட்ட ஒதுக்கீடு ஆகியவை நிறுத்தப்படும். அதன் பிறகு அவை மீண்டும் வழங்கப்படாது. அதன் பிறகு, RQWL இன் கீழ் வைத்திருக்க,உங்கள் டிக்கெட் வைக்கப்படும்
தட்கல் காத்திருப்பு பட்டியல் (CKWL/TQWL ): தட்கல் டிக்கெட்டுகளுக்காக உருவாக்கப்பட்ட காத்திருப்பு பட்டியல் CKWL/TQWL என அழைக்கப்படுகிறது. GNWL இல் சில RAC இன் கீழ் கொடுக்கப்பட்டுகின்றன. அங்கு இருவர் ஒரு இருக்கையைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் தட்கல் டிக்கெட் அப்படி இல்லை. முடிந்தவரை முழு சீட் தான் உறுதிப்படுத்தப்படும். ஆனால் சார்ட் தயாரிக்கும் போது, பொது காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளை உறுதிபடுத்திய பின்னர் தான் இந்த பட்டியல் கணக்கில் எடுக்கப்படும். எனவே இந்த காத்திருப்பு பட்டியலில் டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு.