முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்தியாவில் மிகவும் முன்னேறிய இந்த 6 கிராமங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இந்தியாவில் மிகவும் முன்னேறிய இந்த 6 கிராமங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

ஒரு சில இந்திய கிராமங்கள் மற்ற கிராமங்களை விட தங்கள் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி தனித்துவத்துடன் நிற்கிறது.

  • 17

    இந்தியாவில் மிகவும் முன்னேறிய இந்த 6 கிராமங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

    கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று தேச தந்தை மகாத்மா  கூறியுள்ளார்.  அவற்றின் உற்பத்தி நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் ஒரு சில இந்திய கிராமங்கள் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சியின் விளைவாக மற்ற கிராமங்களை விட தங்கள் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி தனித்துவத்துடன் நிற்கிறது. அப்படியான கிராமங்களைத்தான் சொல்ல இருக்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 27

    இந்தியாவில் மிகவும் முன்னேறிய இந்த 6 கிராமங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

    மில்லினியர்கள் கிராமம்: மகாராஷ்டிராவின் அகமத்நகர் பகுதியில் உள்ள ஹிவாரே பஜார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வறுமை மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. கிராமத்தின் அதிர்ஷ்டம் 1990 களில் திரும்பியது, இப்போது இந்த கிராமம்  சுமார் 60 மில்லியனர்களைக் கொண்டு விவசாயம் மூலம் உருவான ஒரு பணக்கார சமூகமாக உள்ளது. இதற்கு முக்கிய பங்கு வகித்த போபத்ராவ் பவாருக்கு 2020 மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

    MORE
    GALLERIES

  • 37

    இந்தியாவில் மிகவும் முன்னேறிய இந்த 6 கிராமங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

    புத்திசாலித்தனமான கிராமம்: , குஜராத் புன்சாரி கல்வியில் நவீன, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த கிராமத்தில் அனைத்து மக்களுக்கும் வைஃபை இணைப்பு உள்ளது. கிராமத்தில், பாதுகாப்பை அதிகரிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பஞ்சாயத்து உள்ளூர் கனிம நீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் வடிகால் திட்டங்கள், சுகாதார மையம், வங்கி மற்றும் கட்டணமில்லா புகார் கையாளும் சேவைமையங்கள்  போன்றவை உள்ளன. இதை பார்த்த  நைரோபி பிரதிநிதிகள்தங்கள் கிராமங்களிலும் அதை செயல்படுத்த முயன்று வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 47

    இந்தியாவில் மிகவும் முன்னேறிய இந்த 6 கிராமங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

    ஆசியாவின் தூய்மையான கிராமம்:   மேகாலயாவின் கிழக்கு காசி மலைப் பகுதியில் உள்ள மவ்லின்னாங் கிராமம் ஆசியாவின் "சுத்தமான கிராமம்" என்று  குறிப்பிடப்படுகிறது.  500 பேர் வாழும் இந்த கிராமத்தில் உற்பத்தியாகும் குப்பைகள் அனைத்தும், ஒரு சிறப்பு கழிவு மேலாண்மை அமைப்பால் உரமாக மாறுகிறது. கிராமத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பசுமை மற்றும் தூய்மையான விருதுகளை வென்றுள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    இந்தியாவில் மிகவும் முன்னேறிய இந்த 6 கிராமங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

    இந்தியாவின் பாதுகாப்பான கிராமம்:  மகாராஷ்டிராவின் ஷனி ஷிங்கனாபூர் பாதுகாப்பான இந்திய கிராமமாக அறியப்படுகிறது. கிராமத்தில் எந்த வீட்டிற்கும் கதவுகள் இல்லை. காவல் தெய்வ நம்பிக்கை இருக்கும் இந்த கிராமத்தில்  குற்ற விகிதங்கள் இருப்பதால் இது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. ஊரின் நடுவே இருக்கும் சனி பகவான் தான் தங்கள் ஊரை பாதுக்கப்பதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 67

    இந்தியாவில் மிகவும் முன்னேறிய இந்த 6 கிராமங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

    ஆத்மா நிர்பார் கிராமம்:  மத்தியப் பிரதேசத்தின் படல்கோட் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களே அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் உற்பத்தி செய்கிறார்கள். பழங்குடியின கோண்ட் மற்றும் பரியா மக்கள் வாழ்ந்து வரும் காடுகளுக்குள் மறைந்து கிடக்கும் படல்கோட், நீண்ட காலமாக இந்திய வரைபடத்தில் கூட காட்டப்படவில்லை. 500 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளத்தாக்கில் தனிமைப்படுத்தப்பட்ட பரியா பழங்குடி மக்கள்  உள்ளூர் தாவரங்களிலிருந்து மூலிகை மருந்துகளை உருவாக்குவதில் வல்லவர்கள். அதனால் மருத்துவம் , உணவு என்று எல்லாவற்றிலும் தன்னிறைவுடன் இருக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 77

    இந்தியாவில் மிகவும் முன்னேறிய இந்த 6 கிராமங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

    இந்தியாவின் முதல் முழு சூரிய சக்தி கிராமம்:  பீகாரில் உள்ள போத்கயாவிற்கு அருகில் உள்ள  தர்னை பெரும்பாலான கிராமங்களைப் போலவே அடிப்படை எரிசக்தியைப் பெற  போராடியது. பல தசாப்தங்களாக, டீசல்  ஜெனரேட்டர்கள் மற்றும் மாட்டு சாணத்தை எரிபொருளாக பயன்படுத்தியுள்ளனர். பின்னர் இந்த கிராமத்தில் வசிக்கும் 2,400 க்கும் மேற்பட்ட மக்கள், கிரீன்பீஸின் 100-கிலோவாட் மைக்ரோகிரிட் மூலம்  சூரிய சக்தியால் இயங்கும் அமைப்பை போட ஆரம்பித்தனர்.  100-கிலோவாட் சோலார் மைக்ரோகிரிட் -  சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் இன்வெர்ட்டர்கள் கொண்டு  450 வீடுகளுக்கும், சிறு வணிகங்கள், பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களுக்கும் மின்சாரம் உருவாக்கி வருகின்றனர்.

    MORE
    GALLERIES