புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி:
16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த தேவாலயம், வேளாங்கண்ணியில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். நடுக் கடலில் வீசியப் புயலில் சிக்கித் தவித்த போர்ச்சுக்கீசியர்களை பத்திரமாகக் கரை சேர்த்த அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவர்கள் வேளாங்கண்ணியில் இருந்த சிறிய ஆலயத்தை பெரிதாக கட்டி எழுப்பினர். தங்கள் கப்பலின் பாய்மரத் தூணை ஆலயக் கொடிமரமாக நட்டனர். இன்றும் அதை காணமுடியும்.
செயின்ட் தாமஸ் கதீட்ரல் ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். தமிழ்நாட்டின் சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பகுதியில் அமைந்துள்ளது. கிபி 1523 இல் போர்த்துகீசியர்களால் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவரான செயின்ட் தாமஸின் கல்லறைக்கு மேலே இந்த அமைப்பு அமைக்கப்பட்டது
மதுரையில் உள்ள செயின்ட் மேரிஸ் கதீட்ரல் சர்ச் , டோலோர்ஸ் அன்னை ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தேவாலயம் சுமார் 150 ஆண்டுகள் பழமையானது. மதுரையில் உள்ள இந்த முக்கிய புண்ணிய ஸ்தலம் ஐரோப்பிய, ரோமானிய மற்றும் பிற கட்டிடக்கலைகளின் வியக்கத்தக்க கலவையாகும். இங்கு முப்பரிமாண கண்ணாடி சவப்பெட்டியில் ஒரு அற்புதமான கிறிஸ்து சிலை வைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த கட்டிடம் மேலுருந்து பார்த்தால் சிலுவை போலவே இருக்கும்.
கன்னியாகுமரியில் உள்ள மீனவர்களின் கிராமத்தின் நடுவே லேடி ஆஃப் ரான்சம் சர்ச் தேவாலயம் உள்ளது. நகரின் உயரமான அடையாளங்களில் இந்த 12 கோபுர கட்டிடமும் ஒன்றாகும். கோதிக் மற்றும் நியோ-கோதிக் கட்டிடக்கலை பாணி தேவாலயத்தின் உள்ளே, ஒரு தங்க பலிபீடம் உள்ளது, அதில் அலங்காரா மாதா என்று போற்றப்படும் அன்னை மேரியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும், அன்னை மரியாவின் முடிசூட்டு விழாவை பூமிக்கும் சொர்க்கத்திற்கும் ராணியாக சித்தரிக்கும் மர வேலைப்பாடுகள் உள்ளன.
1974 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கப்பல் மாதா தேவாலயம் திருநெல்வேலியில் இருந்து 70 கிமீ தொலைவில் கடலோரத்தில் அமைந்துள்ளது.தேவாலயத்தின் முந்தைய கட்டுமானம் கடல் அரிப்பில் சேதம் அடைந்தது. இதனால், உள்ளூர்வாசிகள் ஒரு புதிய தேவாலயத்தை கடற்கரையை விட்டு தள்ளி கொஞ்சம் வித்தியாசமாக தெரிய, கடல் விமான கட்டிடக்கலை வடிவமைப்பைக் கட்ட முடிவு செய்தனர்.தேவாலயத்தில் மூன்று இறை வழிமாற்று தலமும் மற்றும் சில பிராத்தனை அரங்கங்கள் உள்ளன.
திருச்சியில் உள்ள லூர்து லேடி தேவாலயம், பிரான்சில் உள்ள உலகப் புகழ்பெற்ற புனித யாத்திரை ஸ்தலமான லூர்து அன்னை ஆலயத்தின் துல்லியமான பிரதிபலிப்பாகும்.தேவாலயத்தின் கோபுரம் 62 அடி உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது. இதை 8 கிமீ சுற்றளவில் எங்கிருந்தும் பார்க்கமுடியும். ரோமன் கத்தோலிக்க பாணி கட்டிட பழமையை அப்படியே பராமரிக்க அசல் நிறங்கள் மேல் மீண்டும் வர்ணம் பூசப்படவில்லை.