சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பிரபலமாகி வருகின்றன. அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தங்கள் பகுதிக்கும் இயக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் இந்திய ரயில்வே துறையிடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் வந்தே பாரத் ரயிலுக்கு முன்பே சில பிரபலமான ரயில்கள் உள்ளன.
இதுவரை நம் பயண வரலாறுகள் அல்லது பார்த்த ரயில்களின் பெயர்களை பார்த்தல் ராஜதானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் பெயர்களை கவனித்திருப்போம். ஆனால் இந்த பெயர்கள் எந்த அடிப்படியில் குறிப்பிட்ட ரயில்களுக்கு சுட்டப்படுகின்றன என்பதை யோசித்திருக்க மாட்டோம். அதற்கான விடையை இன்று பார்த்துவிடலாம்.
சதாப்தி எக்ஸ்பிரஸ்: அனைத்து மக்களும் குறைந்த விலையில் ஒரு நகரை விட்டு இனொரு நகரத்திற்கு போக வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது தான் சதாப்தி எக்ஸ்பிரஸ். சதாப்தி எக்ஸ்பிரஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும். ஆனால் இதில் பெர்த்துக்களுக்கு பதிலாக முழுக்க முழுக்க நாற்காலி பெட்டிகள் (chair coach )கொண்ட ரயிலாக இருக்கும்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை கடக்கும் போது, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 400 கிலோமீட்டர் முதல் 800 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது. இது இந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் 100வது பிறந்தநாளில் இந்த ரயில் தொடங்கப்பட்டது. இதனால் இந்த ரயிலுக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் என்று பெயர் வந்தது. சதம் என்பது 100 ஐக் குறிக்கும்.
துரந்தோ எக்ஸ்பிரஸ்: துரந்தோ எக்ஸ்பிரஸ் என்பது மேற்கண்ட இரண்டு ரயில்களை விட அதிக வசதிகள் கொண்ட ரயில். துரந்தோ என்பது பெங்காலி சொல். இந்த வார்த்தைக்கு தொடர்ச்சி என்று பொருள். இந்த ரயில் மிகக் குறைந்த ரயில்நிலையங்களிலேயே நிறுத்தப்படும். நீண்ட தூரத்தை உள்ளடக்கிய இது மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.
சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் பொறுத்தவரை இதுவரை 13 வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளன. இந்த அனைத்து ரயில்களிலும் நாற்காலி பெட்டிகள் உள்ளன. வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 180 கிமீ வேகத்தில் பயணிக்கின்றன. மேலே விவரிக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் விட வந்தே பாரத் ரயில்கள் வேகமானவை. சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.