வினோத் இயக்கிய வலிமை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் தனது பைக் பயணத்தைத் தொடங்கினார். முதலில் 2021 ஆண்டில், தமிழகத்தின் வெள்ளோட்டில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள இடங்களுக்கு தனது பைக்கில் பயணம் செய்து சுற்றிய அஜித் அதன் பிறகு தனது 61வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த பிறகு மீண்டும் இந்தியாவில் பைக் பயணத்தை மீண்டும் தொடங்கினார்.
துணிவு பட படப்பிடிப்புக்கு பின்னர் அவர் தனது சர்வதேச சுற்றுலாவைத் தொடங்கினார். அவர் பூட்டான், நேபால் உள்ளிட்ட நாடுகளை பைக்கில் சுற்றி முடித்துள்ளார். இதனையடுத்து மகிழ் திருமேனி இயக்க இருக்கும் 'விடாமுயற்சி'க்கான அறிவிப்பு வந்ததை அடுத்து தனது பைக் ட்ரிப்புக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு பட வேலைகளை தொடங்க இருக்கிறார்.
துணிவு படத்தின் படப்பிடிப்பின் போது இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் அஜித் பைக்கில் ரெய்டு நடத்தினார். அந்த பயணத்தில், சண்டிகர், மணாலி, சர்ச்சு, லே, நுப்ரா பள்ளத்தாக்கு, பாங்காங் டிசோ, டிசோ மோரிரி, கார்கில், ஸ்ரீநகர், ஜம்மு, சண்டிகர், ஹரித்வார், ரிஷிகேஷ், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற இடங்களை பார்த்து வந்தார்.
அவர் ஏற்கனவே ஐரோப்பாவில் சில இடங்களிலும் தாய்லாந்தில் சில இடங்களிலும் உலக சுற்றுப்பயணம் செய்துள்ளார். உலக சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டம் 2023 நவம்பரில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பயணத்தில் நியூஸிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள இடங்களை சுற்றிப்பார்க்க உள்ளார் என்றும் அவரது மேனேஜர் கூறியுள்ளார்.