ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னர் பிரிட்டிஷ் அரியணை ஏறினார். இன்று அவருக்கு அதிகாரப்பூர்வமாக மன்னர் என்று முடிசூட்டப்பட்டது. இந்நிலையில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் புதிய தலைவராகவும், பிரதிநிதியாகவும் இருக்கும் இவரது வாழ்க்கை முறை மற்றும் வழக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். வித்தியாசமான வழக்கங்களைத் தான் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.
மன்னர் சார்லஸ் பயணித்து எங்கு சென்று தங்க இருந்தாலும், தனது முழு படுக்கையறையையும் அந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோருவாராம்.நண்பர்களின் வீடுகளில் தங்குவதற்காக அவர் பயணம் செய்தபோதுகூட , முந்தைய நாள் அவரது படுக்கை, தலையணை, அது மட்டும் இல்லாமல் அவரது படுக்கை அறையை சுற்றி உள்ள படங்களை கூட ஒரு டிரக் வைத்து எடுத்து சென்றுள்ளனர்.
நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, மூன்றாம் சார்லஸ் மன்னர் அவரது சொந்த கழிப்பறை இருக்கை மற்றும் க்ளீனெக்ஸ் வெல்வெட் டாய்லெட் பேப்பரை அவர் எங்கு சென்றாலும் கொண்டு செல்வாராம். இது 2015 ஆம் ஆண்டு வெளியான 'சர்விங் தி ராயல்ஸ்: இன்சைட் தி ஃபர்ம்' என்ற ஆவணப்படத்தில், சார்லஸின் மறைந்த மனைவி இளவரசி டயானா மற்றும் ராணிக்கு பட்லராகப் பணியாற்றிய பால் பர்ரெல், தெரிவித்துள்ளனர்.