கடந்த ஆண்டு மட்டும் கேரளாவிற்கு 16.7 மில்லியன் சுற்றுலாவாசிகள் விசிட் அடித்துள்ளனர். இப்படி மில்லியன் கணக்கில் மக்கள் கேரளாவிற்கு இளைப்பாற செல்வதற்கு அது இயற்கையின் சொர்கமாக இருப்பதே காரணம். அப்படி மலைக்க வைக்கும் இடங்களை சுற்றிப்பார்க்க நவம்பர் சரியான மாதம் எனலாம். நீங்களும் நவம்பரில் செல்ல டிக்கெட் புக் செய்திருக்கிறீர்கள் எனில் இந்த இடங்களையும் காண மறவாதீர்கள்.
குமரகம் : கோட்டையத்திலிருந்து 14 கி,மீ தொலைவில் உள்ள இந்த இடம் ஏரிக்கு பெயர் போனது. குமரகம் ஏரி கடல் போன்று காட்சியளிக்கும். அதன் பரப்பளவு நம்மை வியக்க வைக்கும். ஏரிக்கு அருகில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன. ரூம் புக் செய்து கொள்ளுங்கள். கூடவே மசாஜ் செண்டர்களும் இருக்கும். ஓய்வாக மசாஜ் எடுத்துக்கொள்வது சொர்கம் செல்வதற்கு சமம்.