எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை 1916 இல் நிறுவப்பட்டது, இது பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும் . இந்த மைதானத்தில் 1934 ஆம் ஆண்டு மெட்ராஸ் மற்றும் மைசூர் அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக் கோப்பையின் முதல் போட்டி நடைபெற்றது. அதே போல டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸி அணியின் ஹோம் கிரவுண்ட் இதுதான். மெரினா கடற்கரைக்கு அருகில் 38000 பேர் அமரும் வகையில் இந்த மைதானம் அமைந்துள்ளது.
அசாம் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம் என்பது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவஹாத்தியில் உள்ள பர்சபராவில் (barsapara) எபின்ற இடத்தில அமைந்துள்ளது .ஸ்டேடியம் அதிகபட்சமாக 50,000 பார்வையாளர்களை அனுமதிக்கும். அசாம் கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான இந்த மைதானம் இந்த ஆண்டு வடகிழக்கு இந்திய பகுதியில் நடக்கும் முதல் ஐபிஎல் போட்டி எனும் சரித்திரத்தை பெற உள்ளது.
அருண் ஜெட்லி ஸ்டேடியம் என்பது டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும். இது புது தில்லியில் உள்ள பகதூர் ஷா ஜாபர் மார்க்கில் அமைந்துள்ளது. இது 1883 இல் பெரோஸ் ஷா கோட்லா மைதானம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது பழமையான சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும். இதன் முதல் சர்வதேச விளையாட்டு 1948 இல் நடத்தப்பட்டது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்த மைதானத்தில் தேசிய அணி தோற்கடிக்கப்படாத நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கு இந்த மைதானம் மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.
1864 இல் நிறுவப்பட்ட ஈடன் கார்டன்ஸ்(Eden gardens) என்பது இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானமாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும். இந்த மைதானத்தில் தற்போது 66,000 பேர் வரை அமர்ந்து கிரிக்கெட் விளையாட்டை ரசிக்க முடியும். இந்த மைதானம் முதன்முதலில் 1934 இல் முதல் டெஸ்ட் போட்டியை நடத்தியது.
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா(EKANA) சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும். ஒரே நேரத்தில் 50,000 ரசிகர்கள் வரை அமரக்கூடிய இது நாட்டின் மூன்றாவது பெரிய மைதானமாகவும், இருக்கை வசதியின் அடிப்படையில் உலகின் ஆறாவது பெரிய மைதானமாகவும் அமைகிறது. அதே போல இந்தியாவில் நீண்ட ஸ்ட்ரெய்ட் பவுண்டரி தூரம் கொண்ட ஸ்டேடியமாக இது உள்ளது.
மும்பையில் 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வான்கடே மைதானத்தில் (Wankhede Stadium) ஒரே நேரத்தில் 34000 பேர் அமரும் வசதி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் டீமின் ஹோம் கிரவுண்ட் என்று அழைக்கப்படும் இடமாக இந்த ஸ்டேடியம் உள்ளது. அரபிக்கடலோரம் அமைந்துள்ள இந்த ஸ்டேடியத்தின் ஈரப்பத சுற்றுசூழல், ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் கடைசி சர்வதேசப் போட்டி போன்ற முக்கிய போட்டிகள் இங்குதான் நடந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியம் ஜெய்ப்பூர் பகுதியின் முன்னாள் மகாராஜா இரண்டாம் சவாய் மான் சிங் நினைவாகப் பெயரிடப்பட்டது. இந்த விளையாட்டு அரங்கத்தில் ஒரே நேரத்தில் சுமார் 30,000 பேர் அமர்ந்து கிரிக்கெட்டை பார்க்கலாம். இது தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஹாம் கிரவுண்டாகும்.
ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ளது . ஹைதராபாத்தில் கிழக்கு புறநகர் பகுதியான உப்பலில் அமைந்துள்ள இதன் அதிகபட்ச கொள்ளளவு 55,000 இருக்கைகள் ஆகும். இந்த ஸ்டேடியம் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹோம் கிரவுண்ட் ஆகும்.