மஞ்சள் மணற்கற்களால் நிறைந்த அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா (yellowstone national park) மார்ச் 1, 1872 இல் தேசியப் பூங்காவாக அன்றைய ஜனாதிபதி யுலிசஸ் எஸ். கிராண்ட்டால்(Ulysses S. Grant) அறிவிக்கப்பட்டது. 2 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான மலை வனப்பகுதிகள், அற்புதமான வெந்நீர் ஊற்றுகள் மற்றும் துடிப்பான நிலப்பரப்புகளை தன்னகத்தே கொண்ட இடம் தான் இது.
பூமியில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமாக வெந்நீர் ஊற்றுகளை கொண்ட இந்த தேசிய பூங்காவில் மிகவும் பிரபலமானது: ஓல்ட் ஃபெய்த்ஃபுல், (Old Faithful) என்ற ஊற்று தான். இது ஒரு நாளைக்கு சுமார் 17 முறை வரை நீரை உமிழ்கிறதாம். ஆனால், கடந்த சில தசாப்தங்களில், நீர் உமிழ்வுக்கு இடையிலான சராசரி இடைவெளி நீண்டுள்ளது.
"சாலையைப் பகிர்" என்பது யெல்லோஸ்டோனில் ஒரு புதிய அர்த்தத்தைப் பெறுகிறது. அதன் நீரூற்றுகளுக்கு அப்பால், யெல்லோஸ்டோன் அதன் காட்டெருமை மந்தைகளுக்காக உலகப் புகழ்பெற்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து காட்டெருமைகள் தொடர்ந்து வாழ்ந்த ஒரே இடம் இதுவே. இங்கு கார், பைக்குகளுடன் காட்டெருமையும் சாலையில் பயணிப்பதால் ‘பைசன் ட்ராபிக் ஜாம்கள் ‘ அடிக்கடி ஏற்படும்.
இந்த வெந்நீர் ஊற்றுகளுக்கு மூலமாக இருப்பது யெல்லோஸ்டோனுக்கு அடியில் உள்ள உலகின் மிகப்பெரிய செயலில் உள்ள எரிமலைகளால் தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.யெல்லோஸ்டோன் எரிமலையின் முதல் பெரிய வெடிப்பு 2.1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது மற்றும் 5,790 சதுர மைல்களுக்கு மேல் சாம்பலால் மூடப்பட்டிருந்தது என்று குறிப்பிடுகின்றனர்.இதற்காக அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் உட்டா(Utah) பல்கலைக்கழகத்துடன், இணைந்து 2001 ஆம் ஆண்டில் யெல்லோஸ்டோன் எரிமலை ஆய்வகத்தை நிறுவியது