ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா..? நீங்கள் அறிந்திராத 8 சுவாரஸ்யங்கள்..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா..? நீங்கள் அறிந்திராத 8 சுவாரஸ்யங்கள்..!

1873 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னையின் முதல் ரயில் நிலையம் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா..?

 • 19

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா..? நீங்கள் அறிந்திராத 8 சுவாரஸ்யங்கள்..!

  என்றாலே அனைவரின் நினைவுக்கு வரும் முதல் இடம் சென்ட்ரல் ரயில் நிலையம்தான். சென்னை சிறப்புகளை பற்றி பேசும் போதும் சென்ட்ரல் ரயில் நிலையத்தை தவிர்க்க முடியாது. சென்னையை காட்ட நினைக்கும் பல படங்களில் சென்ட்ரல் நிலையத்தை முதலில் காட்டிய பின்பே கதைக்களம் நகரும். இப்படி தலைநகர் சென்னையின் அடையாள சின்னமாக விளங்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைப் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை சொல்கிறது இந்த கட்டுரை.

  MORE
  GALLERIES

 • 29

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா..? நீங்கள் அறிந்திராத 8 சுவாரஸ்யங்கள்..!

  சென்னையின் முதல் ரயில் நிலையம் : 1873 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னையின் முதல் ரயில் நிலையம் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா..? ஆம், அதற்கு முன் 1856 ஆம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் கட்டப்பட்டதே முதல் ரயில் நிலையமாகும். பின் அங்கு நெரிசலை சமாளிக்க முடியாத காரணத்தால் , கட்டாயத்தின் பெயரில் விரிந்த பரப்பளவில் கட்டப்பட்டத்துதான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். பார்க் டவுனில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையமானது டெல்லி, அகமதாபாத், பெங்களூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர் ,போப்பால், கொல்கத்தா , லக்னோ, மும்பை , பாட்னா, திருவனந்தபுரம் என பல மாநிலங்களை இணைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 39

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா..? நீங்கள் அறிந்திராத 8 சுவாரஸ்யங்கள்..!

  இதை கட்டியவர் இவர்தான் : 147 ஆண்டுகளை கடந்து இன்றும் சென்னையின் கம்பீரமாக காட்சியளுக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஜார்ஜ் ஹார்டிங்கின் வழிகாட்டுத்தலின்படி கட்டமைக்கப்பட்டது. இது தென்னிந்தியாவிற்கு வரும் மக்களுக்கு முக்கிய நுழைவு வாயிலாக உள்ளது. இதன் அமைப்பே மிகவும் வித்தியாசமாக திட்டமிடப்பட்டிருக்கும். நீங்கள் கவனித்திருந்தால் தெரியும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் புகழ்பெற்ற பக்கிங்ஹாம் கால்வாயின் இருபுறங்களிலும் அமைந்திருக்கும். இந்த கால்வாய்தான் பிரதான ரயில் நிலையத்தையும், புறநகர் ரயில் முனையையும் பிரிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 49

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா..? நீங்கள் அறிந்திராத 8 சுவாரஸ்யங்கள்..!

  பிரம்மிக்க வைக்கும் கட்டிடக்கலை : பாரம்பரிய மிக்க கட்டிடக்கலை பட்டியலில் சென்ட்ரல் ரயில் நிலையமும் உண்டு. இந்த கட்டிடமானது ரோமனெஸ்க் மற்றும் கோதிக் கட்டிடக்கலையை (romanesque and gothic architecture) தழுவி கட்டப்பட்டதாகும். இது 136 அடி உயரத்தில் நான்கு முகங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அதன் நான்கு முகங்களிலும் நான்கு கடிகாரம் கொண்ட கோபுரம் பழங்கால கட்டிடக்கலையை பிரதிபலிப்பதாக இருக்கும். இதன் ஜன்னல்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருப்பதே இதன் தனித்துவம்.

  MORE
  GALLERIES

 • 59

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா..? நீங்கள் அறிந்திராத 8 சுவாரஸ்யங்கள்..!

  சிவப்பு நிறத்திற்கு பின் இருக்கும் தனித்துவம் : 2005 ஆண்டு வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கட்டிட நிறம் வெளிர் பழுப்பு நிறத்தில் இருந்தது. ஆனால் இதன் நிறத்தை தனித்துவமாக மாற்ற முடிவு செய்து சிவப்பு நிறம் மாற்றப்பட்டது. அது அந்த கட்டிடக்கலையின் அழகை மேலும் சிறப்பாக்கியது. அந்த நிறமே இன்று அதன் அடையாளமாகவும், தனித்துவமாகவும் மாறிவிட்டது.

  MORE
  GALLERIES

 • 69

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா..? நீங்கள் அறிந்திராத 8 சுவாரஸ்யங்கள்..!

  மணிக்கூண்டு கோபுர ரகசியம் : நீங்கள் கவனித்திருக்கிறீர்களா..? கட்டிடத்தின் கோபுரத்தில் ஒரு கொடிக்கம்பம் இருக்கும். அந்த கொடிக்கம்பத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே கொடியேற்றப்படும். அதாவாது குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என இந்த இரண்டு தினங்களில் மட்டுமே அந்த கொடிக்கம்பத்திற்கு செல்ல கடிகார கோபுரத்தின் சுழல் படிகட்டு நிழைவு திறக்கப்படும். நீங்கள் மதராசபட்டினம் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் பார்த்த அந்த கடிகார கூண்டு படிக்கட்டுகள்தான் அது.

  MORE
  GALLERIES

 • 79

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா..? நீங்கள் அறிந்திராத 8 சுவாரஸ்யங்கள்..!

  நவீன வசதிகள் கொண்ட ரயில் நிலையம் : இந்திய ரயில் நிலையங்களில் சென்னையில்தான் பே பிளாட்ஃபார்ம் என்று சொல்லக்கூடிய முற்றுபெறும் ரயில்வே பிளாட்ஃபார்ம் உள்ளது. இங்கு பிரீமியம் பார்க்கிங் வசதி, தண்ணீர் இயந்திரங்கள், இலவச வைஃபை வசதி, கழிப்பறை, தங்கும் அறை, ஓய்வு அறை, உணவகங்கள் போன்ற தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. அதோடு 24 மணி நேரமும் அவசர தேவைக்கு மருத்துவ வசதிகளும், எப்போதும் நிற்கும் ஆம்புலன்ஸுக் இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 89

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா..? நீங்கள் அறிந்திராத 8 சுவாரஸ்யங்கள்..!

  பெயர் உருவான வரலாறு : சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தின் பெயர் இரண்டு முறை மாற்றப்பட்டுள்ளது என்பது தெரியுமா..? ஆம், முதன் முதலில் மெட்ராஸ் ரயில் நிலையம் என்ற பெயரில் இருந்தது. பின் ’சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்’ என பெயரை மாற்றினர். அதன் பின் மீண்டும் அரசால் 'புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி ராமசந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்’ என்று இரண்டாவது முறை மாற்றப்பட்டது. தற்போது இதுதான் உலகின் 2வது மிக நீளமான ரயில் நிலையப் பெயராக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 99

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா..? நீங்கள் அறிந்திராத 8 சுவாரஸ்யங்கள்..!

  இந்தியாவின் முதல் ரயில் கடத்தல் : 2009 ஆண்டு சென்னை புறநகர் ரயில் நிலையம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டது. இந்தியாவில் இரயில் நிலையம் உருவாக்கப்பட்டு இப்போது வரை இதுவே முதல் ரயில் கடத்தலாகும். இந்த கடத்தலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 11 பயணிகள் காயமடைந்தனர்.

  MORE
  GALLERIES