’’சுயம்புவாய் காட்சியளிக்கும் சிவன்’'... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இத்தனை சிறப்பம்சமா? வியக்க வைக்கும் கதை...
இங்கு மீனாட்சி என்று அழைக்கக்கூடிய பார்வதி தேவி சிலை மரகத கல்லால் செதுக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மனின் திருமேனி பச்சை நிறத்தால் காட்சியளிக்கும்.
Web Desk | March 17, 2021, 12:01 PM IST
1/ 12
மீனாட்சி கோயில் இந்தியாவின் மிகப் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் கோயில் நகரமான மதுரை பகுதியில் வைகை ஆற்றின் கரையில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது ஒரு சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆகியோர் ஆவர். பார்வதி தேவியின் ஒரு வடிவமான மீனாட்சியை வணங்குவதற்காக இந்த கோயில் கட்டப்பட்டது.
2/ 12
இக்கோயிலே, தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில், முதல் பூஜை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. அதன் பிறகு தான் சிவபெருமானுக்கு பூஜை நடக்கிறது. மேலும் இது எண்ணற்ற சிற்பத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு அற்புதமான கட்டிடக்கலையைக் கொண்ட கோயிலாகும். இந்த கோயில் மிகவும் கம்பீரமாகவும் பிரமாண்டமாகவும் இருக்கும். உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வந்து கோயிலை பார்வையிடுகிறார்கள். அந்த வகையில் கோயிலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்களை குறித்து பார்ப்போம்.
3/ 12
இந்திர தேவரால் முதலில் கட்டப்பட்டது: பிரபலமான நம்பிக்கைகளின்படி, மீனாட்சி கோயில் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது இந்திர தேவாவால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகளும், சிற்பங்களும் ஷில்பா சாஸ்திரம் என்று அழைக்கப்படுகின்றன.
4/ 12
விஸ்வநாத நாயக்கால் மீண்டும் கட்டப்பட்டது: இந்த கோயில் ஆண்டை நாட்டவரால் கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு 1560ம் ஆண்டில் பாண்டய சாம்ராஜ்யத்தின் ஆட்சிக் காலத்தில் விஸ்வநாத் நாயக்கால் மீண்டும் கட்டப்பட்டது. இந்த சம்பவம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அந்த சமயத்தில் திருமலை நாயக்கின் ஆட்சியின் போது, மதுரை தலைநகராக விளங்கியது. அதன்பின்னர், மீனாட்சி அம்மன் கோபுரம், காளத்தி முதலியாரால், கி.பி. 1570-ல் கட்டப் பெற்று, கி.பி. 1963ம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம், கி.பி. 1570ம் ஆண்டில் கட்டப் பெற்று, திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
5/ 12
மதுரை மீனாட்சி கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில், கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய, நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன. இவற்றுள் இராஜ கோபுரம் (கிழக்குக் கோபுரம்) கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323ம் ஆண்டிலும், தெற்குக் கோபுரம் கி.பி. 1559ம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572ம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் கி.பி. 1878ம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இன்னும் இதன் கட்டிடக்கலை புரியாத புதிராகவே விளங்குகிறது.
6/ 12
33,000 ஆயிரம் வேதங்கள்: சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சியை வணங்குவதற்காக இந்துக்கள் பெரும்பாலும் வருகை தருகின்றனர். இந்த கோவிலில் 2 தங்க சிற்பங்களுடன் 33,000 வேதங்களும், 14 நுழைவாயில்களும் உள்ளன. அதில் கருவறையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நுழைவாயில் 170 அடி உயரத்துடன் மிகப்பெரியதாக இருக்கும்.
7/ 12
ஏப்ரல் மாதம் மட்டும் சுமார் 1 மில்லயன் மக்கள் தரிசனம் செய்வர்:வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த நாளில் 25,000 க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு வருகை தருகின்றனர். மேலும் ஏப்ரல் மாதத்தில், கடவுள்களின் திருமணத்தையும் ஒருங்கிணைப்பையும் நினைவுகூரும் வகையில், மீனாட்சி திருக்கல்யாணம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும். மேலும், கோயில் சம்பாதிக்கும் மாத வருமானம் ஆண்டுக்கு சுமார் 60 மில்லியன் ஆகும்.
8/ 12
ஆயிரங்கால் மண்டபம் :இந்தியாவின் ஏழு அதிசயங்களில் மீனாட்சி கோயிலும் பட்டியலிடப்படுவதற்கு இந்த ஆயிரங்கால் மண்டபமும் ஒன்று. அதாவது மண்டபம் சுமார் ஆயிரம் கல் தூண்களால் கட்டப்பட்ட மற்றொரு குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை ஆகும். அதுவும் ஒரே ஒரு பாறையில் கட்டப்பட்டது. சுவாமி சன்னதியின் இடப்புறத்தில் அமைந்துள்ளது. மிகச் சிறப்பு பெற்ற இம்மண்டபம், கி.பி.1494ம் ஆண்டில் மதுரையை அரசாண்ட, முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில், அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது. மண்டப வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
9/ 12
இத்தூண்களை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும், ஒரே வரிசையில் அமைந்திருக்கும் காட்சி வியப்பானது. இதுதவிர 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி சன்னதி அமைந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றும், அழகாக செதுக்கப்பட்டு, 73 × 76 சதுரமீட்டர் (நீள, அகலம்) உள்ள கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில், இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன. இம்மண்டபம், கோயில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, பல்வேறு காலத்திய சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள், இசைத் தூண்கள், தியான சித்திரங்கள் என, பல்வேறு சிறப்புப் அம்சங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
10/ 12
சிறப்பம்சம் மிக்க மீனாட்சி தேவியின் சிலை:மதுரை மீனாட்சி கோயிலின் மற்றொரு சிறப்புமிக்க விஷயம் அம்மனின் சிலை. இங்கு மீனாட்சி என்று அழைக்கக்கூடிய பார்வதி தேவி சிலை மரகத கல்லால் செதுக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மனின் திருமேனி பச்சை நிறத்தால் காட்சியளிக்கும். இது நம்பமுடியாத அழகாகவும், தனது ஒளிரும் கண்களால் அம்மன் உயிருடன் இருப்பதைப் போல தெரியும் காட்சிகள் அனைத்தும் தெய்வீகமானது. பார்வதி மூன்று மார்பகங்களுடன் பிறந்ததால் இக்கோயிலில் அம்மன் தெய்வத்தை மூன்று மார்பகங்களுடன் காணலாம். அதேபோல மீனாட்சி அம்மனின் வலது கால் சற்று முன்னோக்கி இருப்பது போன்று இருக்கும். காரணம் பக்தர்களின் அழைப்பிற்கு உடனே ஓடி வந்து அருள்புரியக்கூடியவள் என்பது பொருள்.
11/ 12
சுயம்புவாய் காட்சியளிக்கும் சிவன்: சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடியுள்ளார். சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும்.
12/ 12
குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இக்கோயிலில் சுந்தரேசுவரர் என்று அழைக்கப்படும் சிவன், சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் உள்ள சிவலிங்கம், பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்களில் உள்ள சிவலிங்கங்களுக்கு முன்னே தோன்றியது என்றும் வரலாறு கூறுகிறது.