சாதாரண நகரமாக இருக்கும் வரை அதன் சாலைகளில் ஈ ஆடும். அதுவே தொழில் நகரமாகவோ சுற்றுலாத்தலமாகவோ மாறிவிட்டால் அந்த சாலைகள் எல்லாம் எறும்பு மொய்ப்பது போல் வண்டிகளால் அடைக்கப்பட்டுவிடும். ஒரு கிலோ மீட்டர் சாலையை கடப்பதற்கே நத்தை போல் ஊர்ந்து செல்ல மணிகணக்கில் செலவிட வேண்டும். உலகளாவிய முக்கிய நகரங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. அப்படியான ட்ராபிக் நிறைந்த சில நகரங்களின் பட்டியல் இதோ…
உலகின் மிகவும் நெரிசலான நகரங்களில் தென் அமெரிக்காவின் பெரு நாட்டை சேர்ந்த லிமாவும் ஒன்று. பயணிகள் சராசரியாக 27 நிமிடங்கள் மற்றும் 10 வினாடிகள் நகரத்தில் 10 கி.மீ. பொது போக்குவரத்து கூட இங்கே பயங்கர கூட்டமாகத் தான் இருக்குமாம் கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு 2.4 மணிநேரம் ட்ராபிக்கிலேயே போய்விடுகிறதாம்.
Waze நடத்திய 2015 உலகளாவிய ஆய்வின்படி, மணிலா நகரம் "தென்கிழக்கு ஆசியாவில் மிக மோசமான போக்குவரத்தை" கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸ் புள்ளியியல் ஆணையத்தின் 2015 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மெட்ரோ மணிலாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட நகரங்கள் உலகின் அடர்த்தியான நகரங்களில் சிலவாக பட்டியலிடப்பட்டுள்ளன.