முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஒவ்வொரு இந்திய ரயில் நிலையத்திலும் இத்தனை நடைமேடைகளா..? ஆச்சரியப்படுத்தும் எண்ணிக்கைகள்..!

ஒவ்வொரு இந்திய ரயில் நிலையத்திலும் இத்தனை நடைமேடைகளா..? ஆச்சரியப்படுத்தும் எண்ணிக்கைகள்..!

சில ரயில் நிலையங்கள் அதன் செயல்பாடு, அளவு, ரயில் வரும் எண்ணிக்கை என்று எதோ ஒரு விதத்தில் மற்ற ரயில்  தனித்துவமாக விளங்குகின்றது.

 • 18

  ஒவ்வொரு இந்திய ரயில் நிலையத்திலும் இத்தனை நடைமேடைகளா..? ஆச்சரியப்படுத்தும் எண்ணிக்கைகள்..!

  இந்தியன் ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க். இந்தியாவில் மொத்தம் 7,325 ரயில் நிலையங்கள் உள்ளன. எல்லா ரயில்நிலையங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில ரயில் நிலையங்கள் அதன் செயல்பாடு, அளவு, ரயில் வரும் எண்ணிக்கை என்று எதோ ஒரு விதத்தில் மற்ற ரயில்  தனித்துவமாக விளங்குகின்றது. அப்படி தனித்துவமான சில ரயில் நிலையங்களைப் பற்றி தான் உங்களிடம் சொல்ல இருக்கிறோம்.

  MORE
  GALLERIES

 • 28

  ஒவ்வொரு இந்திய ரயில் நிலையத்திலும் இத்தனை நடைமேடைகளா..? ஆச்சரியப்படுத்தும் எண்ணிக்கைகள்..!

  ரயில் நிலையங்களில் இருக்கும் மிகப்பெரிய மற்றும் சிறிய நடைமேடை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தவிர, மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் பற்றி கூட  கேள்விப்பட்டிருப்பீர்கள்.  ஆனால் நாட்டில் அதிக நடைமேடைகள் கொண்ட ரயில் நிலையங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அங்கு இருக்கும் நடைமேடைகளின் எண்ணிக்கை நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

  MORE
  GALLERIES

 • 38

  ஒவ்வொரு இந்திய ரயில் நிலையத்திலும் இத்தனை நடைமேடைகளா..? ஆச்சரியப்படுத்தும் எண்ணிக்கைகள்..!

  பொதுவாக நம் ஊர் பக்கம் இருக்கும் சின்ன ரயில் நிலையங்கள் எல்லாம் ஒன்று முதல் அதிகபட்சம் 2 நடைமேடைகளை கொண்டிருக்கும். ஜங்ஷன்/ சந்திப்பு வகை ரயில் நிலையங்கள் என்றால் 4 முதல் 6 நடைமேடைகளை சாதாரணமாக பார்க்கலாம். ஆனால் நாட்டில் உள்ள சில  ரயில் நிலையங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட நடைமேடையில் இருக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 48

  ஒவ்வொரு இந்திய ரயில் நிலையத்திலும் இத்தனை நடைமேடைகளா..? ஆச்சரியப்படுத்தும் எண்ணிக்கைகள்..!

  13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் தினசரி பயணிக்கும் இந்திய ரயில்வேயில் கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையம் தான் அதிக ரயில் நடைமேடைகளைக் கொண்டுள்ளது. இந்த நிலையத்தில் மொத்தம் 23 நடைமேடைகள் உள்ளன. அதே நேரத்தில், இங்கு 26 தடங்கள் கொண்ட ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 58

  ஒவ்வொரு இந்திய ரயில் நிலையத்திலும் இத்தனை நடைமேடைகளா..? ஆச்சரியப்படுத்தும் எண்ணிக்கைகள்..!

  இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான நடைமேடைகளைக் கொண்ட நிலையம் என்று பார்த்தால், அதுவும் மேற்கு வங்காளத்தில் தான் இருக்கிறது. சீல்டா என்ற ரயில் நிலையத்தில் சுமார் 20 நடைமேடைகள் உள்ளன. மேலும் இந்த நடைமேடைகள் மிகவும் பரபரப்பான நடைமேடைகள் என்றும் அழைக்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 68

  ஒவ்வொரு இந்திய ரயில் நிலையத்திலும் இத்தனை நடைமேடைகளா..? ஆச்சரியப்படுத்தும் எண்ணிக்கைகள்..!

  நாட்டின் நிதித் தலைநகர் என்று அழைக்கப்படும் மும்பை நகரில் கட்டப்பட்டுள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், நாட்டிலேயே மூன்றாவது அதிக பிளாட்பாரங்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 18 நடைமேடைகள் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 78

  ஒவ்வொரு இந்திய ரயில் நிலையத்திலும் இத்தனை நடைமேடைகளா..? ஆச்சரியப்படுத்தும் எண்ணிக்கைகள்..!

  இது தவிர, தலைநகர் தில்லியில் கட்டப்பட்ட புது தில்லி ரயில் நிலையமும் நாட்டில் அதிகபட்ச நடைமேடைகள் உள்ள  ரயில் நிலையங்களில் ஒன்றாகக் கணக்கிடப்படுகிறது,  தில்லி ரயில் நிலையத்தில் உள்ள மொத்த நடைமேடைகளின் எண்ணிக்கை 16 ஆகும்.

  MORE
  GALLERIES

 • 88

  ஒவ்வொரு இந்திய ரயில் நிலையத்திலும் இத்தனை நடைமேடைகளா..? ஆச்சரியப்படுத்தும் எண்ணிக்கைகள்..!

  ஐந்தாம் இடத்தில் இருப்பது நம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்  தான். இந்த நிலையத்தின் மொத்த நடைமேடைகளின் எண்ணிக்கை 15 ஆகும். சமீபத்தில் அமைதியான ரயில் நிலையமாக மரியா இந்த ரயில் நிலையத்தில் இருந்து ஒரு நாளுக்கு நூற்றுக்கணக்கான ரயில்கள் வந்து செல்கின்றன.

  MORE
  GALLERIES