என்னதான் இந்தியாவில் நினைத்த இடங்களுக்கு அனைவரும் தடையில்லாமல் செல்லாம் என்றாலும், சில இடங்களை காண இந்தியர்களுக்கே அனுமதி வழங்கப்படாது என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம், உண்மைதான்.. இந்தியாவின் முக்கியமான எல்லை பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இடங்களுக்கு செல்ல ILP எனப்படும் ‘உள்நாட்டு நுழைவு அனுமதி’ சீட்டு அவசியம் ஆகிறது. அந்த வகையில் இந்தியாவிற்குள் இந்தியர்களிடம் இந்த ILP அனுமதி சீட்டு கேட்கும் இடங்கள் சிலவற்றை பற்றி இங்கு நாம் காணலாம்.
நாகாலாந்து : மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதிக்கு மிக அருகில் இருக்கும் நாகாலாந்து நாட்டிற்கு செல்ல விரும்பும் மக்கள், ILP அனுமதி பெற வேண்டியது அவசியம். மக்கள் நடமாட்டத்தை கட்டுபடுத்தும் வகையிலும், இங்கு வாழும் பழங்குடி சமூக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.