ராமாயண யாத்திரை என்ற திட்டத்தின் கீழ் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி புதுதில்லியில் இருந்து "ராமாயண யாத்திரை" புறப்பட உள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி, பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசி உள்ளிட்ட ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல முக்கிய இடங்களை இந்த யாத்திரை உள்ளடக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். டில்லியில் இருந்து புறப்படும் ரயில், அயோத்தியில் நிறுத்தப்படும். அங்கு ராமஜென்ம பூமி, ஹனுமான் கோயில் ஆகியவற்றை தரிசித்து விட்டு சரயு ஆரத்தியில் கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
18 நாட்கள் பயணமான ராயமாயண யாத்திரையின் அடுத்த கட்டமாக இந்த ரயில் பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் நிற்கும். அங்கு சீதை பிறந்த இடத்தை பயணிகள் தரிசிக்கலலாம். மேலும் ஜனக்பூரில் இருக்கும் ராம் ஜானகி கோவிலையும் பயணிகள் பார்க்கலாம். ஜனக்பூரைத் தொடர்ந்து பக்சர் நகரில் கஙடகா ஸ்நானம் செய்யும் வகையில் ரயில் நிறுத்தப்படும். தொடர்ந்து வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், பத்ராசலம், நாக்பூர் மற்றும் நந்திகிராம் ஆகிய பகுதிகளுக்கும் ரயில் செல்லும்.
ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டிக்கும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாப்புக் காவலர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி, காசியாபாத், அலிகார், துண்ட்லா, எட்டாவா, கான்பூர் மற்றும் லக்னோ ரயில் நிலையங்களிலும் சுற்றுலாப் பயணிகள் ஏறலாம் இறங்கலாம். முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மற்றும் கூபே எனப்படும் ஏசி பெட்டிகள் மட்டுமே இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணம் ரயில் பயணம், ஏசி அறையில் தங்க, இறங்கும் இடங்களில் ஏசி வாகனங்களில் சுற்றிப்பார்க்க மற்றும் உணவு ஆகியவற்றிறிகான கட்டணம் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இப்போது தொடங்கியுள்ளது. இந்திய ரயில்வேயின் இணையதளமான ஐஆர்சிடிசி மூலம் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்