சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூட்டான், நேபாளம், வங்கதேசம் ஆகிய ஏழு நாடுகளுடன் இந்தியா எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஆனால், இந்த நாடுகளில் சிலவற்றை நீங்கள் ரயிலில் செல்லலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி போக வேண்டும் என்றால் எந்த எல்லைப்புற ரயில் நிலையங்கள் வழியாக நீங்க போவீர்கள் என தெரியுமா….இங்க தெரிஞ்சுக்கோங்க.
ஹல்திபாரி(Haldibari) ரயில் நிலையம் : வங்காளதேச எல்லையில் இருந்து 4.5 கிமீ தொலைவில் உள்ளது. இந்த எல்லை நிலையம் இந்தியாவின் எல்லையில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ள சில்ஹாட்டி ரயில் நிலையம் வழியாக வங்காளதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹல்திபூர்-சில்ஹாட்டி(Chilhati) ரயில் பாதை டிசம்பர் 2020 இல் திறக்கப்பட்டது. மேலும் மிதாலி எக்ஸ்பிரஸ் (Mitali Express) புதிய ஜல்பைகுரி(Jalpaiguri) சந்திப்பில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி, டாக்காவை அடைகிறது.
பெட்ராபோல் (Petrapole) ரயில் நிலையம் : மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்திற்கு அருகில் இந்திய-வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் வங்காளதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே பொருட்களை ஏற்றுமதி - இறக்குமதி செய்வதற்கு ஒரு முக்கியமான போக்குவரத்துப் புள்ளியாக செயல்படுகிறது. கொல்கத்தா நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கும் பந்தன் எக்ஸ்பிரஸில் சவாரி செய்ய செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விசா தேவை என்பதை நினைவில் கொள்க.
ராதிகாபூர் ரயில் நிலையம் : மேற்கு வங்க மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராதிகாபூர் (Radhikapur) ரயில் நிலையம் ஒரு ஜீரோ-பாயின்ட் ரயில் நிலையம். இது இந்திய-வங்காள எல்லையில் செயல்படும் போக்குவரத்து நிலையமாக செயல்படுகிறது. இந்திய மாநிலமான அசாம் மற்றும் பீகாரில் இருந்து பங்களாதேஷுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்ல இந்த எல்லை ரயில் நிலையம் பயன்படுத்தப்படுகிறது. பங்களாதேஷில் உள்ள பிரால்(Biral) ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஜெய்நகர் ரயில் நிலையம் : பீகாரின் மதுபானி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜெய்நகர்(Jaynagar) ரயில் நிலையம் இந்திய-நேபாள எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த நிலையம் நேபாளத்தில் இருந்து வெறும் 4 கிமீ தொலைவில் உள்ளது. மேலும், இது ஜனக்பூர் (Janakpur) குர்தா (Kurtha) நிலையம் வழியாக நேபாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே இந்தியா-நேபாள எல்லை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. மேலும் இந்த சர்வதேச ரயிலில் ஏறுவதற்கு இரு தரப்பிலும் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் அல்லது விசா தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்காபாத் ரயில் நிலையம் : மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள சிங்காபாத்(Singhabad) ரயில் நிலையம் வழியாக ஒரே ஒரு பயணிகள் ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில் ரோஹன்பூர் (Rohanpur) ரயில் நிலையம் வழியாக மீண்டும் வங்கதேசத்துடன் இணைக்கிறது. மேலும், பங்களாதேஷில் இருந்து வரும் சரக்கு ரயில்கள் நேபாளத்தை அடைய இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றன.
முனாபாவோ ரயில் நிலையம் : இந்தியாவின் மேற்கு கடைசி ரயில் நிலையம் முனாபாவோ(Munabao) நிலையமாகும். இது ராஜஸ்தானின் பார்மர்(Barmer) மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பார்டர் ஸ்டேஷனின் வடிவமைப்பு டெல்லி விமான நிலையத்தைப் போலவே உள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் தார் லிங்க் எக்ஸ்பிரஸ், 14889 வழியாக இணைக்கிறது, இது ஜோத்பூரின் பகத் கி கோத்தி (Bhagat ki Kothi ) ரயில் நிலையத்திலிருந்து வாரத்திற்கு ஒரு முறை பாகிஸ்தானின் கராச்சி கான்ட் நோக்கி செல்கிறது.
கெடே ரயில் நிலையம் : மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகஞ்ச் தொகுதியில் அமைந்துள்ள இந்திய-வங்காள எல்லைக்கு அருகில் உள்ள கடைசி ரயில் நிலையம் கெடே(gede) ஆகும். மைத்ரீ எக்ஸ்பிரஸ் ஆகியவை பங்களாதேஷின் தலைநகரான டாக்காவையும் இந்தியாவின் மெட்ரோ நகரமான கொல்கத்தாவையும் நேரடியாக இணைக்கும் முதல் நட்பு ரயில் ஆகும்.
அடாரி ரயில்நிலையம் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அடாரி (Atari) ஷியாம் சிங் ரயில் நிலையம் அடாரி-வாகா எல்லையில் தினமும் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பிரபலமானது. இந்த பாதை வழியாக பயணிக்க பாகிஸ்தான் விசாவைக் வைத்திருக்க வேண்டும். இந்த ரயில் நிலையம் வழியாக சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்(Samjhauta Express), என்ற ஒப்பந்த விரைவு மற்றும் நட்பு ரயில் மட்டும், இது வாரத்திற்கு இரண்டு முறை இந்தியாவின் அடாரி ரயில் நிலையத்திலிருந்து பாகிஸ்தானின் லாகூர் வரை இயக்கப்படுகிறது. பழைய டெல்லி சந்திப்பில் இருந்து புறப்படும். இந்த ரயில் அடாரியை அடையும் வரை இடையில் நிற்காது.