முகப்பு » புகைப்பட செய்தி » இந்த நாட்டில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்... ஆனால் ஒரு மசூதி கூட இல்லை.. என்ன காரணம் தெரியுமா..?.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்... ஆனால் ஒரு மசூதி கூட இல்லை.. என்ன காரணம் தெரியுமா..?.

இங்கு முஸ்லிம்கள், கிருத்துவர்கள் வாழவில்லை என்று நினைத்துவிடவேண்டாம். வழிபாடு தளங்கள் மட்டும்தான் இல்லை.

 • 19

  இந்த நாட்டில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்... ஆனால் ஒரு மசூதி கூட இல்லை.. என்ன காரணம் தெரியுமா..?.

  இந்தியாவின் அண்டை நாடு ஒன்றில் இந்து மற்றும் புத்த கோவில்கள் உள்ளன ஆனால் ஒரு மசூதி , ஒரு தேவாலயம் கூட இல்லை என்றால் நம்புவீர்களா? அதற்காக இங்கு முஸ்லிம்கள், கிருத்துவர்கள் வாழவில்லை என்று நினைத்துவிடவேண்டாம். வழிபாடு தளங்கள் மட்டும் இல்லை. மசூதி கட்ட அரசிடம் பலமுறை அனுமதி கோரியும் அனுமதி கிடைக்கவில்யாம். எங்கு தெரியுமா...?

  MORE
  GALLERIES

 • 29

  இந்த நாட்டில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்... ஆனால் ஒரு மசூதி கூட இல்லை.. என்ன காரணம் தெரியுமா..?.

  உலகில் பல நூறு மதங்களும் மத நம்பிக்கைகளும் உள்ளன. அதில் இந்து, பெளத்தம், கிறித்துவம், இஸ்லாம், யூதர் மதங்கள் பற்றி அதிகம் கேட்டிருப்போம். எல்லா நாடுகளிலும் அந்த நாட்டு மக்களின் அணைத்து நம்பிக்கைகளுக்கும் மத வழிபாடு இடங்கள் இருக்கும். ஆனால் ஒரு நாட்டில் மட்டும்  இல்லை. அதுவும் இறையாண்மையை போற்றும் நம் நாட்டிற்கு அருகிலேயே இருக்கிறது. இந்த  சிறிய நாட்டின் பெயர் பூட்டான்.

  MORE
  GALLERIES

 • 39

  இந்த நாட்டில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்... ஆனால் ஒரு மசூதி கூட இல்லை.. என்ன காரணம் தெரியுமா..?.

  பூட்டான் நிலப்பரப்பை  இந்தியாவின் மாநிலங்களோடு ஒப்பிட்டால்  மிகச்சிறிய மாநிலமான கோவாவின் பரப்பளவில் ஐந்தில் ஒரு பகுதிக்கு சமம். ஆனால் அங்குள்ள மக்கள் தொகை கோவாவை விட இரண்டு மடங்கு, அதிகம் கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 49

  இந்த நாட்டில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்... ஆனால் ஒரு மசூதி கூட இல்லை.. என்ன காரணம் தெரியுமா..?.

  பூட்டான் மொத்த மக்கள் தொகையில் சுமார் 7.5 லட்சம்- 84.3 சதவீத மக்கள் பௌத்தத்தை சார்ந்தவர்களாக இருப்பதால், புத்த கோவில்களும் மடாலயங்களும் ஏராளமாக உள்ளன. இரண்டாவது இடத்தில் இந்து மக்கள் தொகை 11.3 சதவீதம். அவர்களுக்கு அங்கே கோவில்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், தலைநகர் திம்புவில் பூடான் மன்னரே ஒரு அற்புதமான இந்து கோவிலைக் கட்டினார்.

  MORE
  GALLERIES

 • 59

  இந்த நாட்டில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்... ஆனால் ஒரு மசூதி கூட இல்லை.. என்ன காரணம் தெரியுமா..?.

  அதே சமயம் பூட்டானில் முஸ்லிம்களின் மக்கள்தொகை  மொத்த எண்ணிகையில் சுமார் 01 சதவீதமாகும். எண்ணிக்கை அளவில் பார்த்தால் சுமார் 5000 முதல் 7000 இருப்பார்கள். ஆனால் இந்த மக்களுக்கு தொழுகை செய்ய அங்கு மசூதிகளே கிடையாது. கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தாலும், அதிகாரப்பூர்வமாக பூட்டான் அரசு அனுமதி வழங்கவில்லை

  MORE
  GALLERIES

 • 69

  இந்த நாட்டில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்... ஆனால் ஒரு மசூதி கூட இல்லை.. என்ன காரணம் தெரியுமா..?.

  இதேபோல், கிறிஸ்தவமும் நீண்ட காலமாக உள்ளது. ஆனால் பூட்டான் அரசாங்கம் அவர்களையும் தேவாலயம் கட்ட அனுமதிக்கவில்லை. கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை சுமார் 30000 ஆகும். இவர்கள் அடிப்படையில் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நாட்டில் எந்த கிறிஸ்தவ மிஷனரியும் இல்லை, எந்த தேவாலயமும் இல்லை.

  MORE
  GALLERIES

 • 79

  இந்த நாட்டில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்... ஆனால் ஒரு மசூதி கூட இல்லை.. என்ன காரணம் தெரியுமா..?.

  பெரும்பாலும் பூடானுக்கு வரும் முஸ்லீம் சுற்றுலாப் பயணிகள்  பயணத்தின் போது  நமாஸ் செய்ய மசூதிகளைத் தேடுவார்கள். அவர்களுக்கு பும்தாங்கில் அதிகாரப்பூர்வமாக ஒரு சிறிய பிரார்த்தனை அறை உள்ளது. அதைத் தான் அடையாளம் காட்டுவார்கள். அதில் முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மூன்று தனித்தனி அறைகளில் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 89

  இந்த நாட்டில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்... ஆனால் ஒரு மசூதி கூட இல்லை.. என்ன காரணம் தெரியுமா..?.

  திம்புவில் மசூதி இருப்பதாக இணையத்தில் ஒரு சில இடங்களில் தகவல் இருந்தாலும், பௌத்த மற்றும் இந்து மத வழிபாட்டுத் தலங்களைத் தவிர, அதிகாரப்பூர்வமாக பூட்டான் நாட்டில் அத்தகைய கட்டிடமோ வளாகமோ இல்லை. பூடான் அரசும் எதிர்காலத்தில்மசூதி/ தேவாலயத்தைக் கட்ட திட்டமிடவில்லை. தனிப்பட்ட முறையில், சில முஸ்லீம்கள் தங்கள் வீடுகளில் மினாராக்களை கட்டி நமாஸ் செய்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 99

  இந்த நாட்டில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்... ஆனால் ஒரு மசூதி கூட இல்லை.. என்ன காரணம் தெரியுமா..?.

  பூட்டானில் வாழும் பௌத்தர்கள் பொதுவாக அதன் வஜ்ராயனக் கிளையைச் சேர்ந்தவர்கள். ராஜாவும் அதே வழியினர்.  பூட்டான் நிச்சயமாக மத ரீதியாக அனைவருக்கும் சுதந்திரம் அளிக்கிறது. ஆனால், பிற மதங்களின் வழிபாட்டுத்தலங்களை கட்ட இது வரை அனுமதிக்காமல் தான் இருந்து வருகிறது.

  MORE
  GALLERIES