ஹனிமூன் பேகவேண்டும் ஆனால் பட்ஜெட்டிற்குள் இருக்கனுமா..? இப்படி பிளான் பண்ணுங்க..!
செலவு, பயணத்தில் இடர்பாடுகள் என எந்த டென்ஷனும் இல்லாமல் வாழ்க்கைத் துணையுடன் தேன் நிலவை மகிழ்ந்து நினைவுகளை மட்டும் சுமந்து வாருங்கள்...
Web Desk | March 25, 2021, 11:42 AM IST
1/ 7
திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் செல்ல விரும்பும் உங்களுக்கு எங்கு செல்வது? எப்படி செல்வது? என திட்டமிட கஷ்டப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணலாம்.
2/ 7
உங்கள் விருப்பங்கள் குறித்து விவாதியுங்கள்: : நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்லது காதல் திருமணம் என எதுவானாலும், ஹனிமூன் செல்வதற்கு தடை ஏதும் இல்லை. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் செல்ல திட்டமிடுகிறீர்கள் என்றால், முதலில் உங்கள் மனைவியுடன் அமர்ந்து எங்கு செல்லலாம் என்பது குறித்து விவாதியுங்கள். இருவருக்கும் விருப்பமாக இருக்கும் இடங்களை தேர்தெடுங்கள். அதாவது, மலைப்பிரதேசமா? கடற்கரை பகுதிகளா? என்று தீர்மானியுங்கள். அந்த இடத்தில் இருக்கும் தற்போதைய காலநிலையை அறிந்துகொள்ளுங்கள். மலைப்பிரதேசங்களுக்கு குளிர்ச்சியான காலங்களில் செல்லும்போது உங்களின் ரொமான்ஸ் வேற லெவலில் இருக்கும்.
3/ 7
சாகச விளையாட்டுகள் : நீங்கள் தேர்வு செய்யும் இடங்களில் இருக்கும் சாகச விளையாட்டுகளை விளையாடுவது குறித்தும் முன்பே இருவரும் பேசிக்கொள்வது நல்லது. ஸ்கூபா டைவிங், மலையேற்றம், பங்கி ஜம்பிங் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கு வசதியாக இருக்கும். விளையாட்டுகளில் விருப்பம் இல்லாமல் இருந்தால், காதல் சின்னங்கள் இருக்கும் வரலாற்று நகரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். உதாரணமாக, தாஜ்மஹால், ஈபிள் கோபுரம், பீசாவின் சாய்ந்த கோபுரம் இருக்கும் நகரங்களுக்கு செல்லலாம்.
4/ 7
பயண நாட்கள் : நீங்கள் ஹனிமூன் செல்லும் நாட்கள் குறித்து முன்பே திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஏனென்றால், ஒருவேளை இருவரும் வேலையில் இருக்கிறீர்கள் என்றால், கடைசி நேரத்தில் எடுக்கும் முடிவுகள் குழபங்களுக்கு வழிவகுக்கும். பயணம் மகிழ்ச்சியாக இருக்காது. ஒரு வாரமா? அல்லது ஓரீரு நாட்களா? என்பதை தீர்மானித்து அதற்கேற்ற தொலைவிலான இடங்களை தேர்வு செய்ய வேண்டும். பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் உங்களின் திட்டமிடல் இருக்க வேண்டும்.
5/ 7
பயணச்செலவு : பயணம் மேற்கொள்வதற்கு முன்பு மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது பயணச் செலவு. தங்கும் விடுதிகள் கட்டணம், உணவு, விளையாட்டுகளில் பங்கேற்கும் கட்டணம் மற்றும் இதர செலவுகள் குறித்து முன்பே தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் திட்டமிடும் தொகை கச்சிதமாக இருக்கக்கூடாது. பயணச் செலவாக நீங்கள் தீர்மானிக்கும் தொகையில் இருந்து கூடுதலாக 10 விழுக்காடு தொகையை கையில் வைத்திருப்பது நல்லது.
6/ 7
சூழ்நிலை : உங்களின் ஹனிமூன் பயணத்துக்கு நீங்கள் தேர்தெடுக்கும் இடம், உங்களின் அன்பையும், பிணைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையிலும், ரொமான்ஸூக்கு ஏற்ற இடமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம், நீங்கள் செல்லும் இடத்தின் கால நிலை மற்றும் அங்கு இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து முன்பே அறிந்து கொண்டு அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுங்கள். தற்போது கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால், பல இடங்களில் சுற்றால பயணிகளுக்கு அனுமதியில்லை. நீங்கள் தேர்தெடுக்கும் இடத்தில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
7/ 7
ஹேப்பி ஹனிமூன் : பயணம் குறித்து தெளிவாக திட்டமிட்டுவிட்டீர்கள் என்றால், வேறென்ன வேண்டும்? இனிமையான பயணத்தை மேற்கொள்ள தயாராகுங்கள். உங்களின் பார்ட்னருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துங்கள். சின்ன சின்ன விளையாட்டுகள், சர்ப்ரைஸ்கள் கூடுதலான மகிழ்ச்சியை கொடுக்கும். பயணத்தை வாழ்க்கை துணையுடன் ரசித்து வாருங்கள்.