முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ப்ரோக்கன் பிரிஜ் முதல் டிமான்ட்டி காலனி வரை... சென்னை பகுதிகளை சுற்றும் திகில் கதைகள்!

ப்ரோக்கன் பிரிஜ் முதல் டிமான்ட்டி காலனி வரை... சென்னை பகுதிகளை சுற்றும் திகில் கதைகள்!

சென்னையில் சில இடங்களில் மர்மங்கள் நிறைந்துள்ளதாகவும், அதனைச் சுற்றி பல கதைகளும் சொல்லப்படுகிறது. எதற்குமே ஆதாரங்கள் இல்லை என்றாலும் அந்த திகில் கதைகள் மட்டும் மக்களால் நம்பப்படுகின்றன.

 • 19

  ப்ரோக்கன் பிரிஜ் முதல் டிமான்ட்டி காலனி வரை... சென்னை பகுதிகளை சுற்றும் திகில் கதைகள்!

  என்னதான் குடும்ப படம், காமெடி படங்கள் வந்தாலும் பேய் படத்திற்கு இருக்கும் மவுசு என்றும் குறையாது. படங்கள் மட்டுமல்ல பேய் கதைகளும் , மர்மம் நிறைந்த இடங்களும் கூட அப்படிதான். உண்மையோ, பொய்யோ ஒவ்வொரு இடத்தைப்பற்றியும் சுவராஸ்யம் குறையாத அளவுக்கு பல மர்ம கதைகள் உலாவுகின்றன. அப்படி யின் மர்மமான இடங்களாக குறிப்பிடப்படும் இடங்களைப் பற்றித்தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.

  MORE
  GALLERIES

 • 29

  ப்ரோக்கன் பிரிஜ் முதல் டிமான்ட்டி காலனி வரை... சென்னை பகுதிகளை சுற்றும் திகில் கதைகள்!

  1967 ஆம் ஆண்டு உள்ளூர் மீனவர்களின் நலனுக்காக சாந்தோம் கடற்கரையிலிருந்து எலியட்ஸ் கடற்கரைக்கு இடையில் கட்டப்பட்ட பரபரப்பான பாலம்  1977 ஆம் ஆண்டில் வலுவான கடல் அலைகளின் காரணமாக இடிந்தது. இந்த ப்ரோக்கேன் பிரிஜ்ஜில் பல படங்களிலும் போட்டோஷூட்டுக்கும் பகலில் எடுக்கப்படுகிறது. அனால் இரவில் இங்கு இறந்த ஒரு பெண்ணின் ஆவி சுற்றுவதாக கதைகள் உலாவுகின்றன. பேய்க்கதைகள் ஒரு பக்கம் இருந்தாலும் திருட்டு போன்ற குற்றச்செயல்கள் அதிக  நடக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் இந்த இடத்துக்கு  இரவில் செல்ல அனுமதி  மறுக்கப்படுகிறது

  MORE
  GALLERIES

 • 39

  ப்ரோக்கன் பிரிஜ் முதல் டிமான்ட்டி காலனி வரை... சென்னை பகுதிகளை சுற்றும் திகில் கதைகள்!

  சென்னை அபிராமிபுரத்தில் அமைந்துள்ள டி மாண்டி காலனி பற்றி சொல்லவே தேவை இல்லை. 2015 இல் அதை வைத்து ஒரு படமே எடுத்துள்ளனர். இங்கு ஒரு போர்த்துகீசிய வணிகர், அவரது மனநிலை சரியில்லாத மனைவி மற்றும் கைக்குழந்தை அகாலமரணம் அடைந்ததாகவும். அவர்களது ஆவி அந்த இடத்தில் பெரும் அமானுஷ்யத்தை உருவாகியுள்ளதாகவும் நம்புகின்றனர். இந்த காலனியை இரவில் கடந்த பலர் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும்  கதைகள் உண்டு. இதையடுத்து  2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் காலனி இடிக்கப்பட்டது என்றாலும், அதன் பயமுறுத்தும் தன்மை இன்னும் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 49

  ப்ரோக்கன் பிரிஜ் முதல் டிமான்ட்டி காலனி வரை... சென்னை பகுதிகளை சுற்றும் திகில் கதைகள்!

  விக்டோரியா ஹாஸ்டல் சாலை என்பது சேப்பாக்கம் மைதானத்திற்குப் பின்னால் கூவம் பக்கமாகச் செல்லும் மரங்களால் மூடப்பட்ட சாலை. இந்த சாலையில் 1800 களில் கட்டப்பட்ட இந்தோ-சராசெனிக் பாணியிலான விக்டோரியா விடுதி உள்ளது. இந்த வளாகத்தில் இப்போதும் சில மாணவர்கள் உள்ளனர். அவ்வப்போது இங்கு மர்ம ஒலிகள், சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருப்பதாக கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 59

  ப்ரோக்கன் பிரிஜ் முதல் டிமான்ட்டி காலனி வரை... சென்னை பகுதிகளை சுற்றும் திகில் கதைகள்!

  பெசன்ட் நகர் அருகே அமைதியான தோற்றத்தான் ஒருபுறம் பள்ளி மற்றும் மறுபுறம் ஒரு பழைய விலங்குகள் நல மையம், கொண்ட ப்ளூ கிராஸ் ரோடு உள்ளது. இங்குள்ள மரங்களின் அடர்த்தியான விதானம் எப்போதும் இந்த சாலையை மிகவும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். மக்கள் பகலில் இந்த சாலை வழியாகச் சென்றாலும் இரவில் கடக்க அச்சப்படுவார்களாம். இந்த சாலை தொடர்பு படுத்தி பல தற்கொலை கதைகளும் சுற்றுவருகிறது. மேலும் இரவு நேரத்தில் அந்த சாலையில் விசித்திர ஒலிகளும் எழுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 69

  ப்ரோக்கன் பிரிஜ் முதல் டிமான்ட்டி காலனி வரை... சென்னை பகுதிகளை சுற்றும் திகில் கதைகள்!

  1937 இல் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி தாம்பரத்திற்கு அருகில் உள்ள இன்றைய பரந்த, மரங்கள் நிறைந்த வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இங்குள்ள புராணக்கதை என்னவென்றால், இங்குள்ள ஹெபரின் மண்டபம் மற்றும் விலங்கியல் பிரிவு இறந்த குடியிருப்பாளர்களின் ஆன்மாவால் நிறைந்துள்ளது என்று நம்பப்படுகிறது. மலை நேரத்திற்கு பின், மர்மமான ஒலிகள், கண்ணாடி உடைப்புகள் மற்றும் பொருட்கள் விழுவதை பார்த்திருப்பதாக சொல்லப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 79

  ப்ரோக்கன் பிரிஜ் முதல் டிமான்ட்டி காலனி வரை... சென்னை பகுதிகளை சுற்றும் திகில் கதைகள்!

  பேய் கதைகள் சென்னையின் கட்டிடங்கள் மற்றும் பாதைகளுக்கு மட்டும் ஆக்கிரமிக்கவில்லை. ஒரு குப்பத்தையே ஆண்டு வருகிறது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு மோசமான சுனாமியின் கரையை தாக்கியதைத் தொடர்ந்து, கரிக்காட்டுக் குப்பம் எனும் மீன்பிடி குக்கிராமம் கடுமையாக சேதமடைந்தது . அதன் குடிமக்களில் பலர் இறந்தனர். மீதமுள்ளவர்கள் வெளியேறினர். அதன் பின்னர் இறந்தவர்கள் ஆவி இங்கே உலவுவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 89

  ப்ரோக்கன் பிரிஜ் முதல் டிமான்ட்டி காலனி வரை... சென்னை பகுதிகளை சுற்றும் திகில் கதைகள்!

  1887 இல் அடையாரில் நிறுவப்பட்ட தியோசாபிகல் சொசைட்டி, 450 ஆண்டுகளுக்கும் மேலான உலகின் மிகப்பெரிய ஆலமரங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது. மலைக்கு பின் இங்கு மர்ம தோற்றங்கள், பயமுறுத்தும் ஒலிகள் எழுவதாக கூறப்பட்டுவருகிறது.

  MORE
  GALLERIES

 • 99

  ப்ரோக்கன் பிரிஜ் முதல் டிமான்ட்டி காலனி வரை... சென்னை பகுதிகளை சுற்றும் திகில் கதைகள்!

  வால்மீகி நகரில் உள்ள செவார்ட் சாலையில் உள்ள வீட்டில் ஒரு பெண்ணின் ஆவி இருப்பதாக நம்பப்படுகிறது. சில நேரங்களில் கதவுகள் திறப்பதையும் மூடுவதையும் பார்க்க முடியும். நீண்ட காலமாக காலியாக இருந்த அந்த வீட்டில் சில வருடங்களுக்கு முன்பு நான்கு இளைஞர்கள் குடியேறியுள்ளனர். வித்தியாசமான சத்தங்கள், அழுகைகள், அலறல்கள் மற்றும் நள்ளிரவில் தோன்றிய காட்சிகளால் பயந்து காலி செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

  MORE
  GALLERIES