தென் சீனக் கடல் பகுதியில் சங்கன் என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்ட ரெஸ்டாரண்ட் இதுவாகும். ஏறக்குறைய 50 ஆண்டு காலம் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவையளித்த வந்த இந்தக் கப்பல் இறுதியாக கடலில் மூழ்கியுள்ளது. சுமார் 250 அடி நீளம் கொண்ட இந்த ரெஸ்டாரண்ட் என்பது ஹாங் காங் மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வந்தது. குறிப்பாக ஹாங்காங் வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள், இந்த மிதவை ரெஸ்டாரண்ட் சென்று தங்குவதையும், அங்கு உணவு சாப்பிடுவதையும் தங்கள் லட்சியமாகக் கொண்டிருந்தனர்.
ஹாங்காங்கில் சாப்பிடுவதற்கு பிரபலமான இடம்: கன்டோனீஸ் வகை சமையலுக்கு பெயர் பெற்றது இந்த உணவகம். டாம் க்ரூஸ், ரிச்சர்டு புரோன்சன் மற்றும் எலிசெபத் 2ஆம் ராணி உள்பட உலகின் பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த நபர்கள் பலர் இங்கு வந்து உணவருந்தி சென்றுள்ளனர். ஜேம்ஸ் பாண்ட் உள்பட பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களில் இந்த மிதவை ரெஸ்டாரண்ட் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பிசினஸ் தோல்வி: ஆனால், 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலம் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டுவித்த போது, இந்த மிதவை ரெஸ்டாரண்டும் அதில் இருந்து தப்பவில்லை. கொரோனா காலத்தில் பிசினசிஸ் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டு விட்டது. ரெஸ்டாரண்ட் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரையில் சுமார் 3 மில்லியன் மக்களுக்கு இந்த ரெஸ்டாரண்ட் உணவளித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கை: இந்த மிதவை ரெஸ்டாரண்டை நடத்தி வந்த அபர்தீன் ரெஸ்டாரண்ட் என்டர்பிரைசைஸ் லிமிடெட் சார்பில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 18ஆம் தேதி ஷிக்ஷா தீவுகள் வழியாக சென்றபோது கடுமையான சூழல்களை இந்தக் கப்பல் எதிர்கொண்டது. தென் சீனக் கடல் பகுதியில் அமைந்துள்ள அந்த தீவுப் பகுதியில், கப்பலின் உள்ளே தண்ணீர் புகுந்து, மூழ்க தொடங்கியது.
யாருக்கும் ஆபத்தில்லை: மிதவை ரெஸ்டாரண்ட் கடலில் மூழ்கிய போதிலும் யாருக்கும் எந்தவித காயமோ அல்லது உயிருக்கான ஆபத்துகளோ நிகழவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஜூன் 19ஆம் தேதி கப்பல் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது. அப்பகுதியில் தண்ணீரின் ஆழம் சுமார் 1,000 மீட்டர் அளவுக்கு உண்டு என்ற நிலையில், கப்பலை மீட்கும் முயற்சி மிகுந்த சிரமம் கொண்டதாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.