சென்னை அரசு அருங்காட்சியகம்: சென்னையின் எழும்பூர்ப் பகுதியில் அமைந்துள்ளது. 1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத் தொகுதி இன்று, 16.25 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் அமைந்த ஆறு கட்டிடங்களுடனும் அவற்றில் அடங்கிய 46 காட்சிக்கூடங்களுடனும் விளங்குகிறது. புவியியல் மாதிரிகளின் சேமிப்பிடமாக தொடங்கியது. இன்று அனைத்து வகையான மாதிரிகளையும் கொண்டுள்ளது.
வள்ளுவர் கோட்டம்: வெறும் 7 வார்த்தைகள் கொண்ட செய்யுளை வைத்து உலகத்தில் எல்லா சூழலுக்கு கருத்து சொல்ல முடியும் என்று காட்டிய திருவள்ளுவரின் விளைவாக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இது தென்னிந்திய பாரம்பரிய கட்டிடக் கலைஞர் வி.கணபதி ஸ்தபதி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அவர் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் கட்டிடக் கலைஞரும் ஆவார். இது ஏப்ரல் 1976 இல் அப்போதைய இந்திய ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கன்னிமாரா பொது நூலகம் : இந்தியாவின் பெரிய மற்றும் பழமையான களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். ஆதலால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் ஆகியவற்றின் ஒரு படி இங்கு பாதுகாக்கப்படும். 1890-இல் நிறுவப்பட்ட இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
ரிப்பனின் பெயர் : இந்தோ சரசனிக் பாணியில், ரூ. 7.5 லட்சம் செலவில் , 132 அடி கொண்ட மைய கோபுரத்துடன், 252 அடி நீளம், 126 அடி அகலத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு இந்தியாவின் உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயர் சூட்டப்பட்டு, 1913- ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி திறக்கப்பட்டது.
சாந்தோம் : பசிலிக்கா இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இயேசுவின் இறைத்தூதரின் கல்லறைக்கு மேல் கட்டப்பட்ட உலகில் அறியப்பட்ட மூன்று தேவாலயங்களில் தேவாலயம் ஒன்றாகும். முதன்முதலில் 1500-1523 காலகட்டத்தில் ஒரு தேவாலயம் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று நாம் காண்பது 1896 இல் கட்டப்பட்டது.
பிரம்மஞான சபை : பிளேவட்ஸ்கி மற்றும் தலைவர் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் ஆகியோர் தலைமையில் நியூயார்க் நகரில் உருவான பிரம்மஞான சபை, தனது தலைமை இடத்தை நியூயார்க்கில் இருந்து சென்னையின் ஒரு பகுதியான அடையாறு என்ற இடத்திற்கு 1882 ஆம் ஆண்டில் இடம் மாறியது
பிரம்மஞான சபை, அடையாறு ஹெலினா பெட்ரோவ்னா பிளேவட்ஸ்கி ஆல் நடத்தப்பட்டது. இங்குள்ள ஆலமரம் ஆசியாவின் பெரிய ஆலமரங்களுள் ஒன்று.
விக்டோரியா நினைவு மண்டபம் : 1882 மார்ச்சில் சென்னை ஜார்ஜ் டவுனின் பச்சையப்பா மண்டபத்தில் சென்னையில் வசித்து வந்த முக்கியப் பிரமுகர்கள் ஒன்று கூடி, சென்னை நகரில் ஒரு டவுன் ஹால் கட்ட முடிவு செய்தனர். அதன்படி 16,425 ரூபாய் செலவில் விக்டோரியா நினைவு மண்டபம் கட்டப்பட்டது. விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக அவர் பெயர் சூட்டப்பட்டது.