வடக்கே இருந்து வந்தால், முதலில் லடாக். இமயமலை சூழந்த பகுதியான இது குளிர்காலத்தில் பனிப்பொழிவுகளை சந்திக்கிறது. ஆனால் வெயில் காலத்தில் பனிப்பொழிவு இல்லாவிடினும், குளிர் நிறைந்த இடமாக காணப்படுகிறது. அங்கு ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கு அருகே ரிவர் ராஃப்டிங், ட்ரெக்கிங் மற்றும் கேம்பிங் போன்றவற்றிற்கான வாய்ப்புகள் உள்ளன.
மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் ஒரு சிறந்த ஹனிமூன் ஸ்பாட் தன ஆனால் அதை தாண்டி கோடை காலத்திற்கு ஏற்ற பிக்னிக் ஸ்பாட்டும் தான். மாநிலத்தின் மிக உயரமான சிகரம் மற்றும் கிழக்கு இமயமலையின் காட்சிகளை பார்க்க சண்டக்பு மலை பக்கம் போகலாம். இந்த இடம் மலையேற்ற ஆர்வலர்களுக்கு ஏற்றது, பசுமையான காடுகள் மற்றும் ரோடோடென்ட்ரான் வயல்களின் வழியாக பல மலையேற்ற பாதை இருக்கும்
இந்தியாவில் ரிவர் ராஃப்டிங்கிற்கு பிரபலமான இடம் என்று தேடும் போது அதில் முதலில் இருப்பது ரிஷிகேஷ் தான். ஆண்டு முழுவதும் வற்றாத நதியாக இருக்கும் கங்கை நதியில் பெருக்கெடுத்தோடும் நீருக்கு மத்தியில், இமாலய காட்டிற்குள் போகும் பயணம் சிறப்பான அனுபவத்தை தரும். ரிஷிகேஷில் இந்த கோடை காலத்தில் நீர் விளையாட்டுகள் போவதே தனி சுகம்.
உள்ளூர் கோடை சுற்றுலா என்றால் ஊட்டி தான்.மலைகளின் அரசி என்ற பெருமையை சுமந்து நிற்கும் நீலகிரி , மேற்கு தொடர்ச்சி மலைகளின் அமைந்துள்ள முக்கியமான சிகரமான தொட்டபெட்டா. அவலாஞ்சி ஏரி, தொட்டபெட்டா சிகரம், மான் பூங்கா, எமரால்டு ஏரி, ஊட்டி தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, கலஹட்டி நீர்வீழ்ச்சி, முதுமலை தேசிய பூங்கா, ஊட்டி மலை ரயில், ரோஸ் கார்டன் என்று பல சுற்றுலா தங்களை தன்னுள் ஒளித்துவைத்துள்ளது.