ஸ்பெயினில் உள்ள மலாகாவின் ரிசார்ட், இந்த விசித்திரமான சட்டங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இங்கு இரவு வாழ்க்கை மிகவும் பிரபலமானது. ஆனால், பல நேரங்களில் உள்ளூர் மக்களுக்கு தொந்தரவாகிறது. இதை தடுக்க உள்ளூர் நிர்வாகம், ஆட்சேபனைக்குரிய செயல்களை செய்பவர்களுக்கு 663 பவுண்டுகள் அதாவது 68 ஆயிரம் அபராதம் விதிக்கிறது . இதுமட்டுமின்றி, ஸ்பெயினின் டெனெரிஃப் நகரில்,சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு கொடுத்தால் 66 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் அக்ரோபோலிஸ், எபிடாரஸ் தியேட்டர் மற்றும் பெலோபொனீஸ் போன்ற சில இடங்களில் சுற்றுலாப் பயணிகள் ஹை ஹீல்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதணிகள் பழங்கால பாரம்பரியத்திற்கு கேடு விளைவிப்பதால் கடந்த 2009-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பார்வையாளர்கள் மென்மையான காலணிகளை மட்டுமே அணிய அனுமதிக்கப்படுவர்.
செல்ஃபி கலாச்சாரம் என்பது இப்பொது மிகவும் அதிகரித்து விட்டது, ஒரு இடத்தில் ஒரு போட்டோ என்பதைத் தாண்டி, வகை வகையாக ஒரே இடத்தில் இருந்து எடுத்துக்கொண்டு இருப்பார். இதனாலேயே பல விபத்துகளும் அசம்பாவிதங்களும் நடக்கின்றன. அதனால் தான் இத்தாலிக்கு வருபவர்களுக்கு மணிக்கணக்கில் நின்று செல்ஃபி எடுக்க அனுமதி இல்லை.மீறினால் £243 அதாவது ரூ. 25,000 அபராதம். இந்த விதி காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பொருந்தும்.