தன்னிச்சையாக இஷ்டம் போல் சுதந்திரமாக இருப்பது தனிப் பயணத்தின் சலுகைகளில் ஒன்றாக இருந்தாலும், செல்லும் இடத்தின் வழக்கமான போக்குவரத்து முறை, தங்குமிட விபரம், பயணிக்கும் இடங்களுக்கான தூரம் மற்றும் சாலை வழிகள், நெரிசல்கள் போன்ற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். போகும் முன்னரே திரும்பி வரும் டிக்கெட் வரை எல்லாவற்றையும் தயாராக எடுத்துச் செல்லுங்கள்.
தனியாக விடுமுறைக்கு செல்லும் போது நீங்கள் தவறவிடக்கூடாத சில பயணத் தேவைகள்: பயத்திற்கு தேவையான தொகையை பணமாக வைத்திருங்கள், கழிவறை பொருட்கள், மருந்துகள், தண்ணீர, உணவு, முக்கியமாக பெண்கள் பெப்பர் ஸ்ப்ரே,வைத்துக்கொள்வது நன்று. வழியில் எத்தனை சோதனைகள் வரும் என்பது தெரியாது. அதனால் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும்.
நீங்கள் தனியாக இருக்கும்போது உங்கள் உணவுகளை நீங்களே எடுத்து செல்வது நன்று. எல்லா இடங்களிலும் உணவு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பிறர் தரும் உணவுகளையும் நம்புவதற்கு மனம் தயங்கும். எனவே தண்ணீர் முதல் உணவு, ஸ்னாக் என்று உங்களுக்கு தேவையானதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். குறைந்த அளவில் அதிக ஊட்டச்சத்துது தரும் பயிர், பருப்பு வகைகள், உலர் பழங்கள், கொட்டை வகைகளை எடுத்து செல்வது நன்று .
என்ன தான் தனியாக போனாலும், அவ்வப்போது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் தங்கியிருக்கும் இடத்தைப் பற்றி அறிந்திருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இது அவர்களுக்கு நம்பிக்கையையும், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்ற எண்ணத்தையும் உருவாக்கும். உங்கள் ஃபோனை சார்ஜ் செய்து, பவர் பேங்கையும் எடுத்துச் செல்லுங்கள்.