முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்த கோடை விடுமுறைக்குத் தப்பித்தவறி கூட இங்கே எல்லாம் போய்டாதீங்க...

இந்த கோடை விடுமுறைக்குத் தப்பித்தவறி கூட இங்கே எல்லாம் போய்டாதீங்க...

Summer vacation | அடிக்கும் வெயிலில் இந்த இடங்களுக்கு போனால் நொந்து போய் தான் வருவோம்

 • 18

  இந்த கோடை விடுமுறைக்குத் தப்பித்தவறி கூட இங்கே எல்லாம் போய்டாதீங்க...

  சுற்றுலாத்தலங்கள் என்பது பல்வேறு வகைப்பட்டு உள்ளது. ஒரு சில இடங்கள் குளுகுளு வென்று இருக்கும். ஒரு சில இடங்கள் வெதுவெதுப்பாக இருக்கும். தார் பாலைவனம் போன்ற இடங்கள் வறண்டு காணப்படும். இப்படி பலதரப்பட்ட இடங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஒவ்வொரு காலத்திற்கு அதற்கு ஏற்ற இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.

  MORE
  GALLERIES

 • 28

  இந்த கோடை விடுமுறைக்குத் தப்பித்தவறி கூட இங்கே எல்லாம் போய்டாதீங்க...

  அந்த வரிசையில், இந்த கோடை காலத்தில் இந்தியாவில் ஒரு சில இடங்களுக்கு தப்பித்தவறி கூட போய்விடக்கூடாது. அடிக்கும் வெயிலில் இந்த இடங்களுக்கு போனால் நொந்து போய் தான் வருவோம். இந்த கோடை விடுமுறைக்கு திட்டமிடக்கூடாத இடங்களின் பட்டியல் இதோ...

  MORE
  GALLERIES

 • 38

  இந்த கோடை விடுமுறைக்குத் தப்பித்தவறி கூட இங்கே எல்லாம் போய்டாதீங்க...

  கோவா: இந்தியர்கள் ஒவ்வொருவரின் குறிப்பாக இளைஞர்களின் கனவு சுற்றுலாதலமாக  'பார்ட்டி நகரம்' கோவா இருந்து வருகிறது. கறைகள் முடியா கடற்கரை, அழகான நிலப்பரப்புகள் நிறைந்த பகுதியாக இருந்தாலும் கோடையின்போது வழக்கத்தை விட இரு மடங்கு வெப்பம் அதிகமாகவே இருக்கும். எனவே இப்போது முதல் ஜூன் தொடக்கம் வரை அங்க செல்வதை கண்டிப்பாக தவிருங்கள். அதன் பின்னர் சென்று பார்ட்டி பண்ணலாம்.

  MORE
  GALLERIES

 • 48

  இந்த கோடை விடுமுறைக்குத் தப்பித்தவறி கூட இங்கே எல்லாம் போய்டாதீங்க...

  ஆக்ரா: உலகில் உள்ள அதிசியங்களில் ஒன்றான தாஜ்மஹால் இருக்கும் ஆக்ராவும் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளின் கூட்டமானது அதிகமாகவே இருக்கும். ஆனால் வெயில் காலத்தில் டெல்லி மற்றும் சுற்றி உள்ள இடங்களின் வெப்பநிலை பற்றி செய்திகள் கேட்டிருப்போம். நேரத்தில் அங்கு செல்வது அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப காற்றுக்கு இடையில் உங்களைத் தள்ளிவிடும். அதனால் வெப்பம் தணிந்த பின்னர் செல்வது நன்று.

  MORE
  GALLERIES

 • 58

  இந்த கோடை விடுமுறைக்குத் தப்பித்தவறி கூட இங்கே எல்லாம் போய்டாதீங்க...

  ஜெய்சல்மர்: தார் பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படும் ஜெயசல்மர் பிரமிக்க வைக்கம் மஞ்சள் நிற மணல் பரப்புகளை கொண்ட இடமாக உள்ளது. இங்கிருக்கும் மணல் திட்டுக்கள் கண்களுக்கு விருந்தாக இருந்தாலும், சுமார் 42 டிகிரி வரை கொளுத்தும் வெயில் உங்களுக்கு  அசெளகரியத்தை தரும். எனவே ஜூன் வரை இங்கு செல்லும் திட்டம் இருந்தால் கைவிட வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 68

  இந்த கோடை விடுமுறைக்குத் தப்பித்தவறி கூட இங்கே எல்லாம் போய்டாதீங்க...

  சென்னை: தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் சென்னையில் அழகான கடற்கரை, பழங்கால கட்டிடங்கள், கோயில்கள் என ஏராளமான இடங்கள் உள்ளன.  3 நாட்களாக மழை பெய்தாலும் சாதாரணமாக கோடை காலத்தில்  சென்னையில் எப்படி அனல் அடுப்பாக சென்னை இருக்கும் என்பது நமக்கு தெரியும். அதனால் இந்த வெயிலில் போய் காய்ந்து கருவாடாகாமல்  ஜூன் மாதத்துக்கு பிறகு வந்தால் பயணத்தை கொண்டாடலாம்.

  MORE
  GALLERIES

 • 78

  இந்த கோடை விடுமுறைக்குத் தப்பித்தவறி கூட இங்கே எல்லாம் போய்டாதீங்க...

  கஜுராஹோ: மத்திய பிரதேசம் மாநிலத்தில் அமைந்திருக்கும் கஜுராஹோ பகுதியில் உள்ள கண்களை கவரும் விதமாக சுவர் சிற்பங்கள் இடைக்கால பாரம்பரியத்தின் சின்னமாக திகழ்கிறது. கட்டிடம் மற்றும் சிற்ப கலை மீது ஆர்வம் உள்ளோருக்கான சிறந்த இடமாக இருக்கும் இங்கு அதை ரசித்து பார்க்க முடியாத அளவில் வெயில் வாட்டி வதைக்கும். இதையும் 1 மதத்திற்கு ஒத்திப்போடுங்க..

  MORE
  GALLERIES

 • 88

  இந்த கோடை விடுமுறைக்குத் தப்பித்தவறி கூட இங்கே எல்லாம் போய்டாதீங்க...

  அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தங்க கோயில் அனைத்து மதத்தினரும் செல்லும் கோயிலாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவதோடு கூட்டம் நிறைந்த பகுதியாகவே அமைந்திருக்கும். மே மாதத்தில் இங்கு நிலவும் உச்சகட்ட வெயில் காலமாக இப்போது தங்கத்தை காய்ச்சி ஊற்றியது போல வெப்பம் இருக்கும். அதனால் 2 மாதங்கள் களைத்து போகலாம்.

  MORE
  GALLERIES