முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஏரிக்குள்ள என்ன இத்தன குழி இருக்கு..! கனடாவில் உள்ள விநோத ஏரி பற்றி தெரியுமா..?

ஏரிக்குள்ள என்ன இத்தன குழி இருக்கு..! கனடாவில் உள்ள விநோத ஏரி பற்றி தெரியுமா..?

ஏரி என்றால் நீல நிறத்தில் இருக்கும். பிங்க் நிற ஆஸ்திரேலிய ஏரியை கூட கேட்டிருப்போம். ஆனால் திட்டு திட்டாக தெரியும் ஏரியை பார்த்திருக்கிறீர்களா?

 • 17

  ஏரிக்குள்ள என்ன இத்தன குழி இருக்கு..! கனடாவில் உள்ள விநோத ஏரி பற்றி தெரியுமா..?

  இந்த உலகத்தில் பல விநோதமான இடங்கள் இருக்கின்றன. தோற்றத்தால், அங்குள்ள கனிமங்களால், நிறத்தால், அதை சுற்றி உள்ள கதைகளால் மற்ற இடங்களை விட வேறுபட்டு நிற்கின்றன. அப்படியான ஓர் இடத்தை பற்றிதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

  MORE
  GALLERIES

 • 27

  ஏரிக்குள்ள என்ன இத்தன குழி இருக்கு..! கனடாவில் உள்ள விநோத ஏரி பற்றி தெரியுமா..?

  கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில்  தெற்கு ஒகனகன் புல்வெளிகள் என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில்தான் ஓசோயோஸ் ஏரி அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக, இந்த கனிம வளம் கொண்ட ஏரி சைல்க்ஸ் ஒகனகன் மக்களின் கலாச்சார வரலாற்றில் ஒரு முக்கிய பகுதியாகவும்  புனிதமானதாகவும் கருதப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 37

  ஏரிக்குள்ள என்ன இத்தன குழி இருக்கு..! கனடாவில் உள்ள விநோத ஏரி பற்றி தெரியுமா..?

  இந்த ஏரியில் உள்ள குழிகள் மற்றும் அதில் தங்கியுள்ள நீர் மற்றும் தாதுக்கள் நோய்களை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அதனால் இதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சைல்க்ஸ் மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 47

  ஏரிக்குள்ள என்ன இத்தன குழி இருக்கு..! கனடாவில் உள்ள விநோத ஏரி பற்றி தெரியுமா..?

  கிளிலுக் என்று அழைக்கப்படும் இந்த ஏரி அக்டோபர் 2001 இல் முதல்  ஒகனகன் நேஷன் அலையன்ஸ் சீஃப்ஸ் எக்ஸிகியூட்டிவ் கவுன்சிலுக்கு சொந்தமானதாக மாறியது. தனியார் சொத்தாக மாறியதால் இங்கு சாதாரணமாக மக்கள் சென்று பார்க்க முடியாது என்றாலும் இதை அருகில் உள்ள குன்றுகளில் இருந்து தெளிவாக பார்க்கலாம்

  MORE
  GALLERIES

 • 57

  ஏரிக்குள்ள என்ன இத்தன குழி இருக்கு..! கனடாவில் உள்ள விநோத ஏரி பற்றி தெரியுமா..?

  இந்த ஏரியில் இயற்கையாகவே சிறிய சிறிய குழிகள் அமைந்துள்ளது. சாதாரண ஏரி மட்டத்தை விட இது கொஞ்சம் ஆழமாக இருப்பதால் குழியில் உள்ள தண்ணீரின் நிறம் கொஞ்சம் அடர்த்தியாக தெரிகிறது. அதனால் தான் வட்ட வட்ட வடிவம் உண்டாகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  ஏரிக்குள்ள என்ன இத்தன குழி இருக்கு..! கனடாவில் உள்ள விநோத ஏரி பற்றி தெரியுமா..?

  கோடை காலத்தில், பெரும்பாலான ஏரி நீர் ஆவியாகி குழிக்குள் மட்டும் தண்ணீர் நிற்கும் காட்சி காண்பவர் கண்களை மயக்கும் வண்ணம் இருக்கும். இங்குள்ள மண்ணில் உள்ள தண்ணீரில் சேகரிக்கப்பட்ட கால்சியம், சோடியம் சல்பேட் மற்றும் மெக்னீசியம் சல்பேட் உள்ளிட்ட தாதுக்களின் அதிக செறிவின் விளைவாக வண்ணமயமான குளங்களாக உள்ளன.

  MORE
  GALLERIES

 • 77

  ஏரிக்குள்ள என்ன இத்தன குழி இருக்கு..! கனடாவில் உள்ள விநோத ஏரி பற்றி தெரியுமா..?

  இந்த ஏரிக்கு ஏராளமான பறவை இனங்கள் வருவதால் பறவை ஆர்வலர்கள் இப்பகுதியை விரும்புகின்றனர். இந்த ஏரி அமைந்துள்ள ஒகேனகன் பள்ளத்தாக்கு, கரடி, கூகர், மூஸ், கரிபோ போன்ற பல்வேறு காட்டு விலங்குகள் மற்றும் பல வகையான ஊர்வனவற்றின் இருப்பிடமாகவும் உள்ளது.

  MORE
  GALLERIES