கடந்த செவ்வாய் அன்று கேரளாவில் வந்தே பாரத் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். காசர்கோடு - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தற்போதைக்கு ஓரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் மூலம் கேரளாவில் எந்தெந்த இடங்களை பார்க்கலாம் அங்கே என்னென்ன இருக்கிறது என்ற பட்டியலை இப்போது நாங்கள் சொல்கிறோம்.
கேரளாவில் உள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வியாழன் தவிர மற்ற நாட்களில் காசர்கோடில் இருந்து மதியம் 14.30 மணிக்குப் புறப்பட்டு அதே நாள் 22.35 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலை அடைந்து, அங்கிருந்து மறுநாள் காலை 05.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 13.25 மணிக்கு காசர்கோடு சென்றடையும். இடையில் இந்த 8 மணி நேர ரயில், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், ஷோரனூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களில் நிற்கும்.
வந்தே பாரத் ரயில் தொடங்கும் திருவனந்தபுரத்தில் குதிரைமாலிகா (புத்தன்மாலிகா) அரண்மனை அருங்காட்சியகம், இந்தியாவின் சொத்துக்கள் அதிகம் கொண்ட பத்மநாதபுரம் கோவில், பத்மநாபபுரம் அரண்மனை, நேப்பியர் அருங்காட்சியகம், கனகக்குன்னு அரண்மனை, பிரியதர்ஷினி விண்வெளி கோளரங்கம், விழிஞ்சம் பாறை வெட்டப்பட்ட குகை, திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா, பெண்களின் சபரிமலை என்று சொல்லும் ஆட்டுக்கல் பகவதி கோயில் என்று பல முக்கிய இடங்கள் உள்ளது.
கேரளாவில் அதிகம் பார்வையிடப்படும் உப்பங்கழிகளில் ஒன்றான அஷ்டமுடி மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும். இது பனை மரங்கள் மற்றும் அடர்ந்த தென்னந்தோப்புகளால் சூழப்பட்ட ஒரு பெரிய பனை வடிவ அல்லது ஆக்டோபஸ் வடிவ நீர்நிலையாகும், இது கொல்லத்திலிருந்து ஆலப்புழாவிற்கு ஹவுஸ்போட் பயணங்களுக்கு உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. அதோடு தங்கசேரி கலங்கரை விளக்கம், முன்ரோ தீவு, திருமுல்லாவரம் கடற்கரை, பாலருவி நீர்வீழ்ச்சி எல்லாம் பார்க்கவேண்டிய இடங்கள்.
திருச்சூர் கேரளாவின் கலாச்சார தலைநகரம் என்றும், பூரம் பூமி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வடக்குநாதன் கோவில், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், டோலர்ஸ் அன்னையின் பசிலிக்கா, பரமேகாவு பகவதி, கலாமண்டலம், ஷக்தன் தம்புரான் அரண்மனை, மரோட்டிச்சல் நீர்வீழ்ச்சி, சாவக்காடு கடற்கரை, சினேகதீரம் கடற்கரை, திருச்சூர் உயிரியல் பூங்கா மற்றும் மாநில அருங்காட்சியகம்த்தை பார்க்கலாம்.