அப்படி கோவா பக்கம் கரை ஒதுங்கும் மக்களுக்காக அந்த மாநில அரசு சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளனர். கெரி கடற்கரையில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தை அடுத்து பாதுகாப்பான சுற்றுலாவை மேம்படுத்தவும், மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோவா சுற்றுலாத் துறை ஆலோசனைகள்/வழிகாட்டுதல்கள்/எஸ்ஓபிகளைத் திருத்தியுள்ளது.
எந்தவொரு தனிநபரும், அமைப்பும், நிறுவனமும் அல்லது வேறு எந்த நிறுவனமும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறுவது கண்டறியப்பட்டால் அல்லது வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறினால், INR 5,000 அபராதம் விதிக்கப்படும். அதோடு இந்திய தண்டனைச் சட்டத்தின் 188வது பிரிவின் கீழ் அவர்கள் சட்ட நடவடிக்கையையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
பொது இடங்களில் மது அருந்துவதை தவிர்க்கவும். கோவா என்றாலே பார்ட்டி நகரம். அங்கே இப்படி சொன்னால் எப்படி என்று கேட்கலாம். ஆனால் கோவாவில், திறந்தவெளியில் மது அருந்துவது மட்டும் தான் தண்டனைக்குரிய குற்றம் மற்றும் சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது. மற்றபடி ஹோட்டல்கள், ரெசார்ட்டுகள், உணவகங்கள் போன்ற சட்டப்பூர்வமாக உரிமம் பெற்ற வளாகங்களுக்குள் நீங்கள் மதுவை உட்கொள்ளலாம்.
வாகனங்களை வாடகைக்கு எடுப்பது: அடுத்த முறை நீங்கள் கோவாவிற்கு வரும்போது, வாகனத்தை வாடகைக்கு எடுப்பதில் கவனமாக இருங்கள். செல்லுபடியாகும் அனுமதிபெற்ற, போக்குவரத்துத் துறையில் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட இடத்தில மட்டும் வாடகைக்கு வண்டி எடுங்கள். சட்டவிரோத சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்மேலும், அதிக கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க, மீட்டர் கட்டணத்தை வலியுறுத்துங்கள்.
கடற்கரைகளில் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களை ஓட்டுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு நீங்கள் பிடிபட்டால், நீங்கள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், மேலும் ஓட்டுநரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்ய வழிவகுக்கும். அதேபோல குடிபோதையில் வாகனம் ஓட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பாரம்பரிய தளங்களை பாதுகாக்கவும் : பயணம் செய்யும் போது, சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறார்கள். பாரம்பரிய தளங்களை பார்த்தால் நம் மக்கள் தங்கள் பெயர்களை அதில் பொறித்துவிடுவது வழக்கம்.அப்படி எழுதி பாரம்பரிய தளங்களை சேதப்படுத்தவோ அல்லது அழிக்கவோ அல்லது வேறு வடிவங்களில் அவற்றை சேதப்படுத்தவோ முயற்சிக்காதீர்கள். தண்டனைக்கு உள்ளாக்கப்படலாம்.