முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோடை விடுமுறைக்கு தேயிலைத் தோட்டத்துக்கு நடுவில் ஓடும் இந்த ஆற்றுக்கு போகலாம்!

கோடை விடுமுறைக்கு தேயிலைத் தோட்டத்துக்கு நடுவில் ஓடும் இந்த ஆற்றுக்கு போகலாம்!

கொழுத்தும் வெயிலுக்கு மத்தியில் 1 வாரமாக மழை பெய்த காரணத்தால் தற்போது நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

  • 16

    கோடை விடுமுறைக்கு தேயிலைத் தோட்டத்துக்கு நடுவில் ஓடும் இந்த ஆற்றுக்கு போகலாம்!

    கோடை விடுமுறையில் குழந்தைகளை அழைத்துச்செல்ல நல்ல நீர்நிலைகளை தேடிக்கொண்டு இருப்போம். பிரபலமான பகுதிகளில் எல்லாம் இப்போது கூட்டம் அலைமோதுவதால், கூட்டம் குறைவாக அதே நேரம், அமைதியாக இருக்கும் இடங்களுக்குப் போனால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அப்படி யோசிக்கும் ஆட்களுக்கு இதோ ஒரு அமைதியான , அழகான ஆற்றங்கரையை பற்றி தான் சொல்ல இருக்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 26

    கோடை விடுமுறைக்கு தேயிலைத் தோட்டத்துக்கு நடுவில் ஓடும் இந்த ஆற்றுக்கு போகலாம்!

    கோவை , திருப்பூர் , பொள்ளாச்சி பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ரொம்ப பக்கத்துலயே குளிர்ச்சியான சூழலுடன் இந்த ஸ்பாட் அமைந்திருக்கிறது. கோவையில் இருந்து 100 கிமீ தூரத்திலும் பொள்ளாச்சியில் இருந்து 60 கிமீ தொலைவிலும் கூளங்கள் ஆறு என்ற இடம் உள்ளது.வால்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் கூழாங்கல் ரிவர் வியூ பாயிண்ட் மற்றும் கூழாங்கள் ஆறு அமைந்துள்ளது.இது வால்பாறையில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

    MORE
    GALLERIES

  • 36

    கோடை விடுமுறைக்கு தேயிலைத் தோட்டத்துக்கு நடுவில் ஓடும் இந்த ஆற்றுக்கு போகலாம்!

    கூழாங்கல் ஆற்றை ஆறு என்று சொல்லும் அளவிற்கு மற்ற ஆறுகளை போல பெரிதாகவோ ஆழமாகவோ இருக்காது. பார்ப்பதற்கு ஓடை போலவே இருக்கும். அதனால் இங்கு நின்று நிதானமாக ஓடும் நதியைப் பார்க்கலாம். மேலும் புல்வெளிகள் சூழ்ந்த இடத்தில் நதிக்கு கீழே கூழாங்கற்கள் நிறைந்துள்ளன. அதனால் தான் கூழாங்கல் ஆறு என்றே பெயர் வந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    கோடை விடுமுறைக்கு தேயிலைத் தோட்டத்துக்கு நடுவில் ஓடும் இந்த ஆற்றுக்கு போகலாம்!

    ஆற்றின் நன்னீர் சுத்தமாகவும் தூய்மையாகவும் காட்சி அளிக்கிறது. மக்கள் கூட்டத்தை அதிகம் பார்க்காததால் அதன் இயற்கை எழில் இன்னும் சீர்குலையவில்லை என்றே சொல்ல வேண்டும். கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் 1 வாரமாக மழை பெய்த காரணத்தால் தற்போது நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    கோடை விடுமுறைக்கு தேயிலைத் தோட்டத்துக்கு நடுவில் ஓடும் இந்த ஆற்றுக்கு போகலாம்!

    இதனால் பொங்கி வரும் நீரில் பசுமையான சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் நீந்துவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் ஏற்றதாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக தீயணைப்பு படையினர் உதவிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 66

    கோடை விடுமுறைக்கு தேயிலைத் தோட்டத்துக்கு நடுவில் ஓடும் இந்த ஆற்றுக்கு போகலாம்!

    பொதுவாக, நீர் மட்டம் குறைவாக இருப்பதால், வெயில் நேரத்திலும் இங்கு ஆற்றில் குளித்து விளையாடலாம். இந்த காரணத்தால் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல ஸ்பாட்டாக இருக்கும்.அதுமட்டும் இல்லாமல் இந்த ஆறு தேயிலை தோட்டத்திற்கு இடையில் அமைந்துள்ளது, அங்கு நீங்கள் அழகான படங்களையும் எடுக்கலாம்.

    MORE
    GALLERIES