கர்ப்பமான பெண்களுக்கு குழந்தை சிவப்பாக வரவேண்டும் என்றால் குங்குமப்பூ போட்ட பாலைக் குடி என்ற சொல்ல கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் அது இரும்புச்சத்தை தாயிக்கு அதிகப்படுத்தத் தான் கொடுப்பது. நிறத்தை பற்றி சொன்னால் ஆர்வமாக குடிப்பார்கள் என்ற யுக்தி தான் அது. குங்கும பூ என்றால் மொத்த பூவும் சாப்பிட முடியாது. சூலகத் தண்டு, சூலக முடி தான் சாப்பிடக்கூடியது.
ஆரோக்கியம் தாண்டி, அழகுசாதன பொருட்கள், சமையளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு கிராம் குங்குமப்பூவே சராசரியாக 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் காஷ்மீரின் குங்குமப்பூ நகரம் என்று குறிப்பிடப்படும் இடமே நம் நாட்டில் காணப்படுகிறது. இலையுதிர் காலத்தில் ஊதா நிற பூக்களால் நிரம்பி வழியும் பாம்பூர் தான் உலகின் மிக விலையுயர்ந்த குங்குமப்பூவை அதிகம் உற்பத்தி செய்கிறது.
சீசன் காலத்தில், இங்குள்ள குங்குமப்பூ வயல்வெளிகள் எல்லாம் பூத்துகுலுங்கி பிரபலமான சுற்றுலா தலங்களாக மாறிவிடும். பூக்களை வேடிக்கை பார்ப்பதோடு குங்குமப்பூ அறுவடை செய்யும் நுட்பமான செயல்முறையை நேரில் காணவும் வாய்ப்பு கிடைக்கும்.இதை பார்க்க உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் இங்கு வருகிறார்கள்.