சென்னையில் இருந்து டெல்லி வரை தினமும் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மணாலிக்கு செல்கிறது . திங்கள் மற்றும் வெள்ளியில் டொரண்ட்டோ எக்ஸ்பிரஸ் செல்கிறது. 28 மணி நேரம் முதல் 33 மணி நேரத்தில் டெல்லியை அடைந்து விடலாம் அங்கிருந்தது சண்டிகர் வழியாகவோ அல்லது நேரே மணாலிக்கு பேருந்துகள் உள்ளது.
சிடார் காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஹிடிம்பா தேவி கோயில் இந்தியாவில் உள்ள மற்ற கோவில்களைப் போலல்லாமல், பீமனின் மனைவியும் கடோத்கச்சின் தாயுமான ஹிடிம்பாவிற்கு (ஹிடிம்பிக்கும்) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மஹாபாரதத்தில் அரக்க அரசன் ஹிடிம்பின் சகோதரியான இவரது நற்செயல்களின் காரணமாக, அவள் ஒரு தெய்வமாக, துர்கா தேவியின் அவதாரமாக கருதப்படுகிறாள்.
மணாலி நகரத்திலிருந்து வெறும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வசிஷ்டர் கிராமங்களுக்குச் செல்லுங்கள். நீங்கள் சாகச விரும்பியாக இருந்தால் , இந்த கிராமத்திற்கு நடந்தே செல்லலாம். அவ்வளவு ரம்மியமான பயணமாக இருக்கும். வசிஷ்டர் கோயிலும் அதன் வெப்ப நீரூற்றுகளும் இங்குள்ள முக்கிய ஈர்ப்புகளாகும். இங்குள்ள தண்ணீருக்கு சிகிச்சை குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.