ரிஷிகேஷ்
இந்தியாவில் ரிவர் ராஃப்டிங்கிற்கு பிரபலமான இடம் என்று தேடும்போது அதில் முதலில் இருப்பது ரிஷிகேஷ் தான். ஆண்டு முழுவதும் வற்றாத நதியாக இருக்கும் கங்கை நதியில் பெருக்கெடுத்தோடும் நீருக்கு மத்தியில், இமாலய காட்டிற்குள் போகும் பயணம் சிறப்பான அனுபவத்தை தரும். ரிஷிகேஷில் நீங்கள் அனுபவிக்கும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக இது இருக்கும். இது போக மலையேற்றத்தையும் செய்யலாம்.
லடாக்
லடாக்கில் இருக்கும்போது சிந்து நதியில் ரிவர் ராஃப்டிங் செய்ய முயற்சி செய்து பாருங்கள். நதி பொதுவாக குளிர்காலத்தில் உறைந்திருக்கும். அதனால் தண்ணீர் கொஞ்சம் உருகி ஓடும் மாதம் பார்த்துவிட்டு செல்லுங்கள். பொதுவாக வெயில் சுட்டெரிக்கும் மாதங்களில் செல்வது நன்று. ஜன்ஸ்கர் ஆற்றின் குளிர்ந்த நீரில் கூட ராஃப்டிங் செய்யலாம்
குலு மணலி
ஹனி மூன் ஸ்பாட்டாக அறியப்படும் குலு மணாலியில் ரிவர் ராஃப்டிங் விளையாட்டுகளும் சிறப்பான அனுபவத்தை தர காத்து கொண்டு இருக்கிறது. ராஃப்டிங் செய்யத்தெரியாது இப்போது தான் முதல் முறை என்றால் உங்களுக்கு ஏற்ற இடம் இது தான். பியாஸ் நதியில் பாய்ந்து செல்லும் நீர் ராஃப்டிங்கின் சிறந்த அனுபவத்தை தரும்.