"புதிய நாள்" என்று பொருள்படும் - நவ்ரூஸ்(Nowruz ) அல்லது பாரசீக புத்தாண்டு - உலகின் பல பகுதிகளில் உள்ள பண்டைய பாரசீக கலாச்சாரங்களைக் கொண்ட நாடுகளில் ஒரு முக்கியமான பண்டிகையாக உள்ளது. மத்திய ஆசியா மற்றும் ஈரானில், மக்கள் தங்கள் வீடுகளை வசந்த காலத்தில் சுத்தம் செய்து, புதிய ஆடைகளை வாங்குவார்கள். அழகான பொருட்கள் மற்றும் பூக்களால் தங்கள் வீடுகளை அலங்கரிப்பார்கள். பாரசீக புத்தாண்டு என்பது மக்கள் ஆடம்பரமான உணவை உண்ணும் நேரம்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் ஒவ்வொரு மார்ச் மாதமும் சவுத் பை சவுத்வெஸ்ட்(South by Southwest ) SXSW புகழ்பெற்ற திருவிழாவாகும். இந்த ஊடக விழாவில் திரைப்படம், இசை மற்றும் நகைச்சுவை நிகழ்வுகள் ஏராளமாக இடம்பெறும். SXSW தொழில்நுட்ப பேனல்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் கண்காட்சிகளை வழங்குகிறது.
மெக்ஸிகோவில் உள்ள பண்டைய மாயன் நாகரிகங்கள் நட்சத்திர நிகழ்வுகள், குறிப்பாக சங்கிராந்திகள் மற்றும் உத்தராயணங்கள் பற்றிய துல்லியமான பதிவுகளை வைத்திருந்தன. குகுல்கானின் பிரமிடு(pyramid of Kukulcán) ஒரு வருடத்திற்கு இரண்டு முறை உத்தராயணத்தின் ஒளி மற்றும் நிழல்களுடன் இணைவதற்காக நம்புகிறார்கள். உத்தராயணத்தில் சூரியன் மறையும் போது, அதன் நிழல் பாம்பை ஒத்திருக்கும். அதை தங்கள் பாரம்பரிய தெய்வமாக வணங்குகிறார்கள்
மியான்மரில் நடக்கும் காக்கு பகோடா திருவிழா(Kakku Pagoda festival) ஒவ்வொரு மார்ச் மாதமும் பா-ஓ(Pa-Oh) மக்களுக்கான அறுவடை பருவத்தின் முடிவைக் கொண்டாடும் நிகழ்வாகும். புத்த பகோடாவைச் சுற்றியுள்ள பகுதி குழந்தைகளுக்கான பொம்மைகள், ஜவுளிகள் மற்றும் உள்நாட்டு கைவினைப் பொருட்களை விற்கும் கடைகளாக மாறுகிறது. வருவாயில் ஒரு பகுதி கோயிலுக்கு நன்கொடையாக வழங்குக்கின்றனர்.
மார்ச் மாதம் ஸ்பெயினில் நடக்கும் லாஸ் ஃபல்லாஸின்(Las Fallas Festival) தோற்றம் தச்சர்களின் பாரம்பரியத்திலிருந்து உருவாகிறது.அவர்கள் குளிர்காலத்தில் பயன்படுத்திய விளக்குகளை வைக்க பயன்படுத்திய மரத்தூண் அமைப்புகளை எரித்து வசந்த காலம் வருவதைக் கொண்டாடினர். அதுவே இன்று வளர்ந்து எரிப்பதற்காக 20 அடி ரம்யமான சிலை செய்யப்பட்டு எரிக்கப்படுகிறது.
மார்ச் மாதத்தில், கொலராடோவில் உள்ள எஸ்டெஸ் பார்க்(Estes Park), அமெரிக்காவில் நகைச்சுவையான திருவிழாக்களில் ஒன்றை நடத்துகிறது. Frozen Dead Guy Days இல் இசையைத் தவிர, ஸ்லோ-மோ (slow motion )பனி சறுக்கி அணிவகுப்பு, சவப்பெட்டி பந்தயம், உறைந்த டி-சர்ட் போட்டி, பனிக்கட்டி பந்துவீச்சு, மனித ஃபூஸ்பால் போட்டி போன்றவற்றையும் நடத்தப்படுகிறது.