முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஜப்பான் முதல் கொரியா வரையான உலகின் அதிவேக ரயில்களின் பட்டியல்..!

ஜப்பான் முதல் கொரியா வரையான உலகின் அதிவேக ரயில்களின் பட்டியல்..!

பயண நேரத்தை குறைப்பதற்காகத் தான் ரயிலின் வேகங்கள் கூட்ட தொடங்கினர். மணி கணக்கில் செல்லும் தூரங்களை நிமிடங்களில் செல்ல முடியும்.

  • 19

    ஜப்பான் முதல் கொரியா வரையான உலகின் அதிவேக ரயில்களின் பட்டியல்..!

    சாதாரணமாகவே ரயில் பயணம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் புல்லட் ரயில், காந்த ஈர்ப்பு ரயில்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படி உலகில் ஓடும் அதிவேக ரயில்களை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 29

    ஜப்பான் முதல் கொரியா வரையான உலகின் அதிவேக ரயில்களின் பட்டியல்..!

    L0 சீரிஸ் மேக்லெவ் என்பது மத்திய ஜப்பான் ரயில்வே நிறுவனம் உருவாக்கி சோதனை செய்து வரும் அதிவேக காந்த உந்துவிசை ரயிலாகும். டோக்கியோவிற்கும் ஒசாகாவிற்கும் இடையிலான சா ஷின்கன்சென் ரயில் பாதையில் L0 தொடரைப் பயன்படுத்த JR சென்ட்ரல் திட்டமிட்டு, கட்டுமானத்தில் உள்ளது. அறிக்கைகளின்படி, LO சீரிஸ் ரயில் அதிகபட்சமாக 310 mph இயக்க வேகத்தில் இயங்கும்.

    MORE
    GALLERIES

  • 39

    ஜப்பான் முதல் கொரியா வரையான உலகின் அதிவேக ரயில்களின் பட்டியல்..!

    TGV POS: 357 MPH 21 ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே அதிவேக ரயில் விட்ட நாடாக பிரான்ஸ் திகழ்கிறது. பாரிஸ், கிழக்கு பிரான்ஸ் மற்றும் தெற்கு ஜெர்மனிக்கு இடையே இயங்கும் இது, 2007 இல் 357 மைல் வேகத்தில் ஓடும் உலகின் அதிவேக ரயிலாக உலக சாதனை படைத்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 49

    ஜப்பான் முதல் கொரியா வரையான உலகின் அதிவேக ரயில்களின் பட்டியல்..!

    ஷாங்காய் மாக்லேவ் என்பது உலகின் முதல் வணிக அதிவேக மாக்லேவ் ஆகும். இது ஷாங்காயின் புடாங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி லாங்யாங் மெட்ரோ நிலையத்தில் முடிவடைகிறது. மேலும் அதன் மொத்த பயண தூரத்தை 7 நிமிடங்களில் முடிக்கிறது. மணிக்கு சுமார் 268 மைல்களை கடக்கிறது.

    MORE
    GALLERIES

  • 59

    ஜப்பான் முதல் கொரியா வரையான உலகின் அதிவேக ரயில்களின் பட்டியல்..!

    HEMU-430X என்பது தென் கொரிய அதிவேக ரயில் ஆகும், இது அதிகபட்சமாக மணிக்கு 430 கிமீ வேகத்தில் செல்லும். மார்ச் 31, 2013 அன்று, சோதனை ஓட்டத்தில் மணிக்கு 421.4 கிமீ வேகத்தை எட்டியது, தென் கொரியா பிரான்ஸ், ஜப்பான் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக 420 கிமீ/மணிக்கு மேல் ஓடும் அதிவேக ரயிலை உருவாக்கும் உலகின் நான்காவது நாடாக மாறியது.

    MORE
    GALLERIES

  • 69

    ஜப்பான் முதல் கொரியா வரையான உலகின் அதிவேக ரயில்களின் பட்டியல்..!

    Fuxing HAO CR400AF/BF: 249 MPH தற்போது சேவையில் உள்ள உலகின் அதிவேகமான மக்லேவ் அல்லாத ரயிலின் தாயகமாகவும் சீனா வெற்றி பெற்றுள்ளது. 'Fuxing Hao' என்ற பெயர் 'புத்துணர்ச்சி' என்று பொருள்படும், மேலும் இரண்டு ரயில்கள் ஒவ்வொன்றும் ஒரு புனைப்பெயருடன் முத்திரையிடப்பட்டுள்ளன: CR400AF என்பது 'டால்பின் ப்ளூ' மற்றும் CR400BF 'கோல்டன் பீனிக்ஸ்'. பெய்ஜிங் தெற்கு மற்றும் ஷாங்காய் ஹொங்கியாவோ நிலையத்திற்கு இடையே ஓடும் இந்த ரயில் 10-மணி நேர பயணத்தை பாதியாக குறைகிறது.

    MORE
    GALLERIES

  • 79

    ஜப்பான் முதல் கொரியா வரையான உலகின் அதிவேக ரயில்களின் பட்டியல்..!

    245 மைல் வேகத்தில் சீறி பாயும் இத்தாலியின் Frecciarossa 1000 மிலன், ரோம், வெனிஸ் மற்றும் புளோரன்ஸ் வழியாகச் செல்லும் ஒரு அற்புதமான பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். இருப்பினும், அதன் வேகம் இப்போது 190 mph ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. சாதாரண ரயில்களை ஒப்பிடும் போது இது வேகமானது தான்.

    MORE
    GALLERIES

  • 89

    ஜப்பான் முதல் கொரியா வரையான உலகின் அதிவேக ரயில்களின் பட்டியல்..!

    டியூட்ஷே பான் ஐஸ்: 205 மைல் வேகத்தில் ஓடும், Deutsche Bahn ICE பெர்லின் மற்றும் மியூனிக் நகரங்களை இணைக்கிறது, மேலும் ஜெர்மனியின் அதிவேக ரயில்களில் ஒன்றாகும்.

    MORE
    GALLERIES

  • 99

    ஜப்பான் முதல் கொரியா வரையான உலகின் அதிவேக ரயில்களின் பட்டியல்..!

    KORAIL KTX: 205 MPH தென் கொரியாவின் மேற்கில் உள்ள இன்சியான் சர்வதேச விமான நிலையத்தையும் கிழக்கில் உள்ள கடலோர நகரமான காங்னியுங்கையும் இணைக்கிறது. இது பயண நேரத்தை 6 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாகக் குறைக்கிறது. இதன் அதிகபட்ச வேகம் என்பது மணிக்கு 205 மைல்களாகும்.

    MORE
    GALLERIES