சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் ஒரு சுற்றுலாத் தலமாகும்.. ஜுவல் சாங்கி விமான நிலையம் இயற்கையின் பின்னணியிலான பொழுதுபோக்கை தன்னுள் கொண்டது. அங்கு ஒருவர் உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றையும், பட்டாம்பூச்சி தோட்டத்தைப் பார்க்கவும் அனுபவிக்கவும் முடியும். விமான நிலையமே ஒரு சிறிய நகரம் போல காணப்படும்.
துபாய் சர்வதேச விமான நிலையம் உலகின் மிகப்பெரிய, பிஸியான அதே நேரம் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாகும். டியூட்டி பிரீ ஷாப்பிங் சென்டர்கள், உலகத் தரம் வாய்ந்த உணவகங்கள்,பொழுதுபோக்கு மண்டலங்கள் ஆகியவை காரணமாக இந்த விமான நிலையத்துக்கு பல ரசிகர்கள் உள்ளனர். உங்களுக்கு போதுமான நேரம் இருந்தால், நீங்கள் ஆன்-சைட் ஸ்பா மற்றும் நீச்சல் குளத்தில் ஓய்வெடுக்கலாம்
ஹேதர் அலியேவ் சர்வதேச விமான நிலையம் கட்டிடக்கலையில் வடிவியல் வடிவங்களின் பல உச்சம் தொடும். பார்ப்பவர் கண்களுக்கு பார்க்கும் திசையெல்லாம் ஆச்சரியத்தை தரவல்ல அமைப்புகளை கொண்டிருக்கும். விமான நிலையத்தில் அறுகோண ஸ்கைலைட்கள், வைர வடிவ சிங்கிள்ஸ் மற்றும் ரோம்பஸ் மாதிரியான தளம் ஆகியவை ஒரே நேரத்தில் தனித்துவமாகவும் பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும்..
இஞ்சியோன் சர்வதேச விமான நிலையம் தென் கொரியாவின் மிகப்பெரிய விமான நிலையம் மற்றும் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். இது உலக விமான நிலைய விருதுகளில் 2022 ஆண்டின் சிறந்த விமான நிலையம் என்ற பட்டத்தை வென்றது.வசதிகள், சௌகரியம், தூய்மை, ஷாப்பிங், உணவு & பானங்கள், ஊழியர்களின் சேவை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக 5-நட்சத்திர விமான நிலையமாக சான்றளிக்கப்பட்டது.
தோஹாவில் உள்ள ஹமத் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு மசூதி, இரண்டு ஹோட்டல்கள், 12 ஓய்வறைகள், பெரிய டூட்டி-ஃப்ரீ ஷாப்பிங் பகுதிகள் மற்றும் இரண்டு ஸ்குவாஷ் கோர்ட்டுகள், உடற்பயிற்சி கூடம்உள்ளது. இயற்கையை பாதுகாக்கும் மரம், ஸ்டீல், ரிம்கள் கொண்டு கண்ணாடியால் கட்டப்பட்டது. பகலில் வெளிச்சத்திற்கு பஞ்சமே இல்லை.இங்கு சுவிஸ் கலைஞரான உர்ஸ் பிஷ்ஷரின் புகழ்பெற்ற 'விளக்குக் கரடி' ஒன்று உள்ளது.