வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் அடையாளம் ஆகும். அது கலாச்சாரம், மதம், மொழி, இனத்திற்கு மட்டும் அல்லாது நில அமைப்பிற்கும் பொருந்தும். உலகத்தில் இருக்கும் 10 வகையான காலநிலையில் பெரும்பாலானவை இந்தியாவில் காணப்படுகிறது. அதே போல நில அமைப்புகளின் அநேக எல்லைகளையும் இங்கு பார்க்கலாம். அப்படி இந்தியாவில் இருக்கும் மாறுபட்ட நில அமைப்புகளையும் அதன் இருப்பிடங்களை பார்ப்போம்.
சூரிய ஒளி குறைவாக இருப்பதால் பூமியின் துருவங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நீர் உறைந்து பனி உருவாகும். ஆனால் பூமியின் மத்திக்கு அருகே இருக்கும் இமயமலை அதீத உயரம் கொண்டதால் பனி நிறைந்த இடமாக உள்ளது. கோடைகாலத்திலும் இங்கு பனி நிலைத்து இருக்கிறது. இந்த பனி உருகி வட மாநிலங்களுக்கு நீர் மூலமாக உள்ளது. லடாக், ஜம்மு, உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசத்தில் இந்த பனிமலைகளை காணலாம்
அல்பைன் அல்லது பனிமலை காடுகள் என்பது பனியில் அழுகாமல் இருக்க ஏற்ற கூர்மையான ஊசிமுனை இலைகள் கொண்ட பைன் மரங்கள் நிறைந்தது. உயரமான இந்த காடுகள் பனியின் குளிர்ச்சியிலும் உறையாமல் தாக்கு பிடித்து வாழும்தன்மை கொண்டது. இந்த காடுகளை லடாக், ஜம்மு, உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம் , சில உத்திர பிரதேச எல்லைகளில் காணலாம்.
காடுகள் என்று எடுக்கும் போது பசுமையான ஒரு காட்சி தான் நம் கண்முன் விரியும். அப்படி அடர்ந்து கிடைக்கும் காடுகளுக்கு உதாரணம் மேற்கு தொடர்ச்சி மழையும் வடகிழக்கு மாநிலங்களும் தான். தொடர்ச்சியான அதே நேரம் அதிக மழை பெறுவதால் புசுமை மாற்றம் இருந்தும் செழுமையான மேற்கு தொடர்ச்சி மலை பசுமை மாறா காடுகளின் உதாரணம் ஆகும். இங்கு அருவிகளும், ஏரிகளும் அதிகம்.