ரிஷிகேஷ், உத்தரகாண்ட் : புனித கங்கை நதியின் தாயகமான இந்த இடத்திற்கு செல்ல பட்ஜெட்டை பற்றி அதிகம் யோசிக்க தேவை இல்லை. ரிஷிகேஷிற்கு ரயில் மூலம் எளிதாக செல்லலாம். டிக்கெட்டுகள் ரூ.1500 முதல் ரூ 2400 வரை தான் செலவாகும். தங்குமிடங்களை பொறுத்தவரை ஒரு நாளுக்கு ரூ.150 என்கிற குறைந்த விலையில் கூட நீங்கள் ஒரு அறையைப் பெற முடியும்.
வாரணாசி, உத்தரபிரதேசம் : வாரணாசியில் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகள் மிகவும் மலிவாக இருப்பதால் பட்ஜெட் டிராவலர்களுக்கு பணப்பற்றாக்குறை பற்றி எந்த கவலையும் வேண்டாம். உங்கள் பயணத்தை சரியாகத் திட்டமிட்டால், ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கும் குறைவான தங்குமிடத்தைப் பெறலாம். மேலும் வாரணாசி இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
மெக்லியோட் கஞ்ச், இமாச்சல பிரதேசம் : டெல்லி அல்லது டெல்லியை சுற்றி இருப்பவர்களுக்கு மெக்லியோட் கஞ்ச் ஒரு இடம் சிறந்த பட்ஜெட் டிராவல் விருப்பமாகும். முன்கூட்டியே திட்டமிட்டால், ஒரு நாளுக்கு 200 ரூபாய்க்கு குறைவான ஹோட்டல்களை பெறலாம்; சுமார் 500 ரூபாய் செலவழித்தால், மெக்லியோட் கஞ்சில் நீங்கள் ஒரு நல்ல தங்குமிடத்தைப் பெறலாம்.
பின்சார், உத்தரகாண்ட் : டெல்லியில் இருந்து சுமார் 9 மணிநேர தூரத்தில் அமைந்துள்ள இந்த இடம், புகழ்பெற்ற பின்சார் வனவிலங்கு சரணாலயத்தின் தாயகமாகும்; டெல்லியில் இருந்து கத்கோடத்திற்கு ரயிலில் செல்வதன் வழியாக குறைவான பட்ஜெட்டில் இந்த இடத்தை அடையலாம். மேலும் செலவைக் குறைக்க, நீங்கள் உள்ளூர் பேருந்து அல்லது ஷேர் டாக்ஸியை பயன்படுத்தலாம்.
கன்னியாகுமரி, தமிழ்நாடு : தமிழகம் , கேரளா மானித்தில் உள்ள பெரும்பாலான மக்கள் செல்ல விரும்பும் ஒரு இடம் கன்னியாகுமரியாகும். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் என்று இரண்டையும் பார்க்கக்கூடிய இந்தியாவின் அழகான இடம் இதுதான். இங்கே பேஸிக் ஹோட்டல் அறைகளின் விலை சுமார் ரூ.800-லிருந்து தொடங்குகிறது. பைக் ரைடு சென்றாலும் 5000 க்குள் தான் செலவாகும்.
வர்க்கலா கடற்கரை : குட்டி கோவா என அழைப்பதும் வர்க்கலா கடற்கரை கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. உங்களுக்கு கடற்கரை பிடிக்கும் என்றால், கண்டிப்பாக இந்த இடத்திற்கு செல்லலாம். சென்னையில் இருந்து வர்க்கலா செல்ல இரயிலில் 15 மணிநேர பணிக்க வேண்டும். டிக்கெட் விலையும் குறைவு. கடற்கரை அருகில் உள்ள தாங்கும் விடுதிகளில் தங்க ஒரு நாளைக்கு, 500 முதல் 800 செலவாகும். மூவாயிரம் ரூபாய்க்குள் உங்களின் வீக்கெண்டு ட்ரிப்பை முடித்துவிடலாம்.