ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கோவிட்-19 கட்டுப்பாடுகள் இல்லாத 5 சுற்றுலா தலங்கள்... உங்கள் கோடைகாலத்தை இங்கே என்ஜாய் செய்யலாம்

கோவிட்-19 கட்டுப்பாடுகள் இல்லாத 5 சுற்றுலா தலங்கள்... உங்கள் கோடைகாலத்தை இங்கே என்ஜாய் செய்யலாம்

இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டும் என்கிற கனவு உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும்.

 • 16

  கோவிட்-19 கட்டுப்பாடுகள் இல்லாத 5 சுற்றுலா தலங்கள்... உங்கள் கோடைகாலத்தை இங்கே என்ஜாய் செய்யலாம்

  வெயில் காலம் வந்தாலே நம்மில் பலருக்கு நினைவு வருவது கோடை விடுமுறை தான். மற்ற நாட்களை விடவும் கோடை விடுமுறையில் பல இடங்களுக்கு சென்று தங்களது நாட்களை சிறப்பாக கழிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இருப்பினும் வெயில் அதிகமாக உள்ளதால் குளிராக உள்ள இடங்களை பலர் தேர்வு செய்வதுண்டு. அதே போன்று தற்போது கொரோனா தொற்றுநோய் பரவல் இருப்பதால் சில கொரோனா கால கட்டுப்பாடுகளும் இருந்து வருகிறது. உங்கள் கோடை விடுமுறையை நீங்கள் நினைப்பது போன்று மிகவும் மகிழ்ச்சியாக செலவழிக்க 5 சர்வதேச சுற்றுலா தலங்களுக்கு சென்று வரலாம். இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டும் என்கிற கனவு உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 26

  கோவிட்-19 கட்டுப்பாடுகள் இல்லாத 5 சுற்றுலா தலங்கள்... உங்கள் கோடைகாலத்தை இங்கே என்ஜாய் செய்யலாம்

  யுனைட்டட் கிங்டம் : யுனைட்டட் கிங்டமில் பல்வேறு சுவாரஸ்யமான சுற்றுலா தளங்கள் உள்ளன.பெரும்பாலான கொரோனா கால பயணக் கட்டுப்பாடுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் நீக்கி உள்ளது. இந்த அறிவிப்பு பலருக்கும் நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, பயணிகள் சோதனை, பயணிகள் இருப்பிடம் படிவம், தனிமைப்படுத்தல் போன்ற சில கட்டுப்பாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு இருந்து வருகிறது. இருப்பினும், வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விதமான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 36

  கோவிட்-19 கட்டுப்பாடுகள் இல்லாத 5 சுற்றுலா தலங்கள்... உங்கள் கோடைகாலத்தை இங்கே என்ஜாய் செய்யலாம்

  நெதர்லாந்து : ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளுக்கான பயணம் தொடர்பான அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் மார்ச் 23-ஆம் தேதி முதல் நெதர்லாந்து அரசு ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக ஷெங்கன் விசா தகவலில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், மார்ச் 23 ஆம் தேதி முதல் மாஸ்க் பயன்படுத்துதல் போன்ற உள்நாட்டு கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை கைவிட போவதாக டச்சு சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இங்கு நெதர்லாந்து நாட்டிற்கு சென்று உங்கள் கோடை விடுமுறையை சிறப்பாக செலவழிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 46

  கோவிட்-19 கட்டுப்பாடுகள் இல்லாத 5 சுற்றுலா தலங்கள்... உங்கள் கோடைகாலத்தை இங்கே என்ஜாய் செய்யலாம்

  இத்தாலி : ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து வகையான கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்க போவதாக இத்தாலி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது ஷெங்கன் செய்தி அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. முக்கியமாக இந்த கோடை காலத்திற்குள் எல்லா விதமான கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்க உள்ளதாக இத்தாலியின் துணை சுகாதார அமைச்சர் ஆண்ட்ரியா கோஸ்டா கூறியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இத்தாலிக்கு செல்ல வேண்டும் என்கிற கனவு உள்ளவர்களுக்கு இந்த அறிவிப்பு நிச்சயம் மகிழ்ச்சியை தரும்.

  MORE
  GALLERIES

 • 56

  கோவிட்-19 கட்டுப்பாடுகள் இல்லாத 5 சுற்றுலா தலங்கள்... உங்கள் கோடைகாலத்தை இங்கே என்ஜாய் செய்யலாம்

  ஐஸ்லாந்து : கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று, ஐஸ்லாந்தின் சுகாதார அமைச்சகம் மற்றும் ஐஸ்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் பயணம் மற்றும் சமூக கூட்டங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதாக பேஸ்புக்கில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளது. எனவே இதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு தங்களது நாட்டில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றுலா நாட்களை செலவழிக்கலாம் என்று கூறியுள்ளது. மேலும் கொரோனா கால தனிமைப்படுத்தும் நடைமுறை இல்லாமல், ஐஸ்லாந்தின் இயற்கை அழகை அனுபவிக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 66

  கோவிட்-19 கட்டுப்பாடுகள் இல்லாத 5 சுற்றுலா தலங்கள்... உங்கள் கோடைகாலத்தை இங்கே என்ஜாய் செய்யலாம்

  நார்வே : கடந்த மாதத்தில் இருந்தே தடுப்பூசி போடப்படாத பயணிகள் உட்பட அனைத்து சுற்றுலா பயணிகளையும் நார்வே நாட்டின் அரசு வரவேற்கிறது. சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட அனைத்து வித கொரோனா கால கட்டுப்பாடுகளையும் நார்வே நாட்டின் அரசாங்கம் நீக்கியுள்ளது. எனவே, உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டினர் எல்லோரும் மாஸ்க் அணியாமல் சுத்தமான காற்றை இங்கு சென்று அனுபவிக்க முடியும்.

  MORE
  GALLERIES