அநேக மக்களின் ஆசை வாழ்வில் ஒரு முறையாவது ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர வேண்டும் என்பது தான். நீங்கள் நீண்ட காலமாக ஐரோப்பாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. படங்களில் வரும் பாடல்களை பார்த்து ரசித்த ஐரோப்பாவிற்கு மலிவான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான எளிதான வழிகளை உங்களுக்கு சொல்கிறோம்.
எல்லா இடங்களுக்கு இந்த முதல் டிப் பொருந்தும். சில விமான நிறுவங்கள் நீண்ட நாளுக்கு முன் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு குறைவான கட்டணத்தில் டிக்கெட் வழங்கும். அதே போல வருடத்தின் எல்லா நாட்களும் ஒரே டிக்கெட் விலை இருக்காது. அதில் குறைவான தொகை வரும் நாளை தொடர்ந்து கண்காணித்து அந்த தேதியில் புக்கிங் செய்யலாம்.
உங்கள் விமானச் செலவுகளைக் குறைக்க மற்றொரு வழி உள்ளது. ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளுக்கும் விமான கட்டணம் அதிகமாக இருக்காது. சில நாடுகளுக்கு மலிவான டிக்கெட்டுகள் கிடைக்கும். அப்படி இருக்கும் நாடுகளை கண்டுபிடித்து அந்த நாட்டிற்கு மலிவான டிக்கெட் மூலம் சென்றுவிட்டு அங்கிருந்து நீங்கள் போகும் நாட்டிற்கு பிற மலிவான போக்குவரத்து அல்லது விமானம் வழியாகவும் பயணிக்கலாம். இது நேரடியாக செல்லும் விமான செலவை விட குறைவாக இருக்கும்.
இது ஒரு முக்கிய விஷயம் இல்லை என்றாலும், விமான டிக்கெட்டுகளை உலாவும்போது பலர் அதை தவறவிடுகிறார்கள். நீங்கள் கொஞ்சம் பணத்தை சேமிக்க விரும்பினால் இதை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள். incognito/ தனிப்பட்ட உலாவல் அல்லது மறைநிலை உலாவல் என்பது பெரும்பாலான இணைய உலாவிகளில் கிடைக்கும் ரகசிய பயன்முறையாகும், இது உங்கள் கணினியில் எந்த தரவையும் சேமிக்காமல் இணையத்தில் உலாவ அனுமதிக்கும். அதோடு விலை குறைந்த வெப்சைட்களையும் காட்டும்
சீசன் இல்லாத நேரத்தில் பயணம் செய்வது எப்போதும் புத்திசாலித்தனமான வழியாகும். எனவே, நீங்கள் நீண்ட நாட்களாக ஐரோப்பாவிற்குப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தால், கோடைக் காலத்திற்குப் பதிலாக குளிர்காலத்தில் பயணம் செய்யுங்கள், அந்த நேரத்தில் நீங்கள் டிக்கெட்டுகளில் பெரும் சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல சீசன் தொடங்குவதற்கு முன்பு செல்வது சீசன் தொடக்கத்தை பார்க்க சிறப்பாக இருக்கும்.
நீங்கள் குடும்பம் அல்லது குழு விடுமுறையில் செல்லும்போது, ஒரே பரிவர்த்தனையில் பல டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்போதும் சிறந்தது என்பதை நினைவில் கொள்க. ஏனென்றால், குழு முன்பதிவுகளுக்கு விமான நிறுவனங்கள் அதிக விலை சலுகைகளை காட்ட முனைவதால், நீங்கள் தனிப்பட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதன் மொத்த கட்டணத்தை ஒரே பரிவர்த்தனையில் செலுத்தி சேமிக்கலாம்
இந்த சேமிப்பு முறை உங்களை சற்று ஆச்சரியப்படுத்தலாம், ஆனால் இது உண்மை தான். நீங்கள் டிக்கெட் பதிவு செய்யும்போது வெளிநாட்டு நாணயத்தின் மூலம் முன்பதிவு செய்து பாருங்கள். இது கணிசமான தொகையைச் சேமிக்க உதவும். ஏன் என்று நீங்கள் கேட்கலாம்; வெளிநாட்டினரை விட உள்ளூர் மக்களுக்கு விமானங்கள் பெரும்பாலும் மலிவானவை. எனவே, நீங்கள் செல்லும் நாட்டில் பயன்படுத்தப்படும் நாணயத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிந்தால், நீங்கள் அதிகமாகச் சேமிக்கலாம்.