டெல்லியில் கோவிட் பாசிட்டிவ் விகிதம் அதிகரித்து வருவதால், டெல்லி சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளார். மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள காரணத்தால் சீக்கிரம் பரவக்கூடிய அபாயம் காரணமல்ல இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பொது இடங்களுக்கு வெளியே செல்ல வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் அதிகரித்து வரும் COVID வழக்குகளைக் கருத்தில் கொண்டு 100 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் கூட்டங்களில் 'கட்டாய முகக்கவசம்' விதியை மீண்டும் கொண்டு வந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் இருமல் மற்றும் சளியுடன் வருபவர்களுக்கு கோவிட் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஹரியானாவுக்குப் பயணம் செய்து, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
மும்பை - பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) பகுதியில் உள்ள அனைத்து நோயாளிகள், பணியாளர்கள் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் நெரிசலான இடங்களில் கட்டாயமாக முகமூடி அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் கொரோனா எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு காரணமாக, நாள்பட்ட நோய்கள் உள்ள அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என்று சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்துள்ளார். நிலைமையை மறுஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டத்தை நடத்திய அமைச்சர், மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும், வைரஸைத் தடுக்க கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றவும் வலியுறுத்தினார்.
COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், புதுச்சேரி நிர்வாகம் சமீபத்தில் பூங்காக்கள், கடற்கரை சாலைகள் மற்றும் திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளது. ஓட்டல்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், மதுபானக் கடைகள், பொழுதுபோக்குத் துறைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவித்துள்ளது
நீங்கள் எந்த இடத்திற்கு பயணம் செய்தாலும் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். அடிக்கடி கைகழுவதையும் சானிடைசர் பயன்படுத்துவதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். அதோடு கூட்டமான இடங்களில் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். சளி, இருமல் காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.