காசி ராமேஸ்வரம் போல காதலின் சின்னமான தாஜ் மஹாலை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும் . அப்படிப்பட்ட தாஜ் மஹாலின் அழகை இரவின் ஒளியில் ரசிக்க வருடத்துக்கு ஒருமுறை அல்லது சிலநாட்கள் தான் பார்க்கமுடியும் என்று நினைத்தால் அதுதான் தவறானது. மாதத்திற்கு 5 நாட்கள், இந்த அற்புதனான வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அதற்கு 2 நாட்கள் முன்னும் பின்னும் தாஜ்மஹால் பார்வையாளர்களுக்கு இரவு காட்சிக்காக அதன் கதவுகளைத் திறக்கிறது. இந்த ஐந்து நாட்களிலும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இரவு 8:30 மணி முதல் 12:30 மணி வரை தாஜ்மஹால் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த நேரத்தில் நிலவொளியின் கீழ் ஒளிரும் காதலின் நினைவுச்சின்னத்தைப் பார்க்கலாம்.