உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன. நிலப்பரப்பு அடிப்படையில் எடுத்துக்கொண்டால், ரசியா தான் உலகின் பெரிய நாடு. உலகின் நீண்ட ரயில் பயணம் என்பதே ரசியாவின் இரண்டு எல்லைகளை இணைப்பது தான். அந்த ரயில் பயணம் சுமார் 7 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. அதே நேரத்தில் உலகின் சிறிய நாடு என்பது வாட்டிகன் நகரம் ஆகும்.
கிருத்துவர்களின் புனித இடமான இந்த நாடு உலகின் மிகப்பெரிய ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றான செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தேவாலயத்தை பிரதானமாகக் கொண்டுள்ளது. அதைச் சுற்றி, அரசு மாளிகை ஒன்று, ஒரு அருங்காட்சியகம், 2 சிறிய கல்வி நிறுவனம்,சில வீடுகள், கடைகள் தான் இருக்கின்றன. இந்த நாட்டின் மொத்த நிலப்பரப்ப வெறும் 0.17 சதுர மைல்கள் அல்லது 0.44 சதுர கிலோமீட்டர்தான் . இதை சுற்றி நடந்தாலே வெறும் 20 நிமிடங்கள் தான் ஆகும்.
கிறிஸ்தவ உலகின் மையப்பகுதி, புனித பீட்டர் அப்போஸ்தலரின் கல்லறை, தலைமை போப்பின் இல்லம் என இந்த நாட்டிற்கான பெருமை முழுக்க சின்ன இடத்திற்கும் அடங்கியுள்ளது. இந்த நாட்டில் வாழும் மொத்த மக்களே 825 பேர்தான்.தேவாலயத்தை பார்த்துவிட்டு அதை சுற்றி வந்தால் நாடு முடிந்துவிடும் அதனால் அதிகபட்சம் 1 மணிநேரம் தான் ஆகும்.